நடிகை ரன்யா ராவ் கணவர் கொடுத்த தகவலால் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கினாரா? உண்மை என்ன?
பெங்களூர்: பிரபல திரைப்பட நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து ரூ.12 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்ததாக கைதானார். இந்நிலையில் அவரது கணவர் கொடுத்த தகவலால் டெல்லி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைதான சிலதகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அது உண்மையா என்பது போலீசார் உறுதி செய்யவில்லை.. இதனிடையே தங்கம் கடத்தல் வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டதாகவும், தனக்கு பின்னால் உள்ளவர்கள் இவர்கள் தான் என ரன்யா கூறியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த 32 வயதாகும் நடிகை ரன்யா ராவ், கன்னடத்தில் மானிக்யா, பட்டாக்கி ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். இதேபோல நடிகர் விக்ரம் பிரபுவுடன் வாகா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் கர்நாடகாவின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் ஆவார்.

ரன்யா ராவ் அண்மை காலமாக அடிக்கடி துபாய்க்கு சென்று வந்தார். கடந்த மார்ச் 3ம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து டெல்லி நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.12 கோடியாகும். இதனிடையே வீட்டில் நடத்திய சோதனையில் 4.75 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் என ஒட்டு மொத்தமாக ரூ.17.29 கோடிக்கு நகைகள், பணம் மீட்கப்பட்டிருந்தது.
அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, தங்கம் கடத்தல் வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டதாகவும், தனக்கு பின்னால் தொழில்அதிபர், ஓட்டல் உரிமையாளர், அரசியல் பிரமுகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் காரணமாக பெங்களூர் தொழில் அதிபர் தருண் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ரன்யா ராவை தங்கம் கடத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அதாவது ரன்யா ராவின் தந்தை ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் யாரிடமும் சிக்க வாய்ப்பு இல்லை என்பதற்காக அதனை அவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி ரன்யா ராவ் கடத்தி வரும் தங்கத்தை நகை வியாபாரிகளுக்கு வழங்கி வந்தாகவும் , இதற்காக அவர்கள் ரன்யா ராவுக்கு பணம் அனுப்பி வைத்து வந்தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு (2024) ஏப்ரல் 25, 26-ந்தேதிகளில் கதக் மாவட்டம் முண்டரகி சிவசேனா சர்க்கிள் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் இருந்து ரன்யா ராவின் வங்கி கணக்குக்கு ரூ.10 லட்சம் வரை அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேநேரம் இந்த வழக்கில் ரன்யா ராவ் சிக்க அவரது கணவர் ஜதீன் ஹுக்கோி தான் முக்கிய காரணம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் உண்மையா இல்லையா என்பதை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.. டெல்லி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரன்யா ராவிற்கு நெருக்கமான யாரோ தான் தகவல் கொடுத்திருக்கலாம் என்றும், அதன் பின்னரே அவர்கள் ரகசியமாக கண்காணித்து பிடித்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. அந்த அடிப்படையில் தான கணவர் காரணமாக இருக்காம் என்று ஊடகங்களில் தகவல்கள் பரவுகின்றன. அதன்படி,. திருமணமான 2 மாதங்களிலேயே ரன்யா ராவ், துபாய்க்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார்.
இது கணவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.இந்த விவகாரத்தில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரன்யா ராவ் துபாயில் இருந்து ரூ.12 கோடி தங்கம் கடத்தி வந்த தகவலை அறிந்து ,இதுபற்றி ஜதீன் ஹுக்கேரி, மத்திய மந்திரி ஒருவருக்கு தகவல் கொடுத்ததாகவும், மத்திய மந்திரியின் கூறியதன் பேரில் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து ரன்யா ராவை கைது செய்ததாகவும் தகவல் பரவி வருவதாக சில கன்னட செய்தி வட்டாரங்கள் சொல்கின்றன.
இதற்கிடையில் தங்கம் கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் லாவல்லி ரோட்டில் உள்ள ரன்யா ராவின் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து ரன்யா ராவிடம் அவர்கள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி ரன்யா ராவை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications