குளியலறையில் சந்தியா இருந்த கோலம்.. பெங்களூரில் 19 வயது இளைஞர் இருந்த கோலம்.. இருவரும் ஒரே ஊர்
பெங்களூர்: கர்நாடகாவில் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுனில் மடிவாளா பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண் குளியலறையில் குளிக்க சென்றார். அவருக்கு வெறும் 19 வயது தான் ஆகிறது. நீண்ட நேரமாகியும் சந்தியா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டி பார்த்தனர். இருப்பினும் எந்த பதிலும் வராததால் உடனே கதவை உடைத்து பார்த்த போது தான் என்ன நடந்தது என்பதை பார்த்த போது ஆடிப்போனார்கள்.
இளம் வயது மாரடைப்பு என்பது 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும், 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவது அபூர்வமாக நடக்கும். ஆனால் இப்போது மிக இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது நடக்கிறது. இளம் வயது மாரடைப்புக்கான முக்கிய காரணம், இதயத்தின் இரத்த விநியோகம் திடீரென தடைபடும்போது, இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. இதனால் அது இதய தசையை சேதப்படுத்தி மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. இது தான் இளம் வயதினரை அதிகம் பாதிக்கிறது.

மாரடைப்பு காரணம் என்று பார்த்தால், கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது ஒரு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடும் போது, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. புகைப்பிடித்தல், அதிக கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதும் மாரடைப்புக்கு காரணமாக உள்ளது. தவறான வாழ்க்கை முறை, அதிக மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவையும் மாரடைப்புக்கு காரணமாக உள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுனில் மடிவாளா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பூர்ணிமா தம்பதியின் மகள் சந்தியாவுக்கு 19 வயது ஆகிறது. இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த சந்தியா குளிக்க குளியல் அறைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். நீண்ட நேரமாகியும் சந்தியா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டி பார்த்தனர். இருப்பினும் எந்த பதிலும் வராததால் உடனே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சந்தியா மயங்கி விழுந்து கிடந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் சந்தியா மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுபற்றி ஒலேநரசிப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதுபோல் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு அருகே கடனூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதாகும் அபிஷேக் என்பவர் பெங்களூரு பசவேஸ்வரா நகரில் தங்கி கார் ஓட்டி வந்தார். நேற்று காலை பசவேஸ்வரா நகரில் உள்ள கார் நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார்.
உடனே சக கார் டிரைவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்த போது, அபிஷேக் மாரடைப்பால் சுருண்டு விழுந்து வரும்வழியிலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications