ஓசூருக்கு போட்டி.. பெங்களூரில் 2வது சர்வதேச விமான நிலையம்? அதுவும் தெற்கு பகுதியில்? முக்கிய தகவல்
பெங்களூர்: தமிழக அரசு சார்பில் தமிழக - கர்நாடகா எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2வது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக பெங்களூரில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ள நிலையில் அது எங்கு அமைய உள்ளது என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக - கர்நாடகா எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அமைந்துள்ளது. தொழில் வளர்ச்சியில் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஓசூரில் தங்களின் தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றன.

இந்நிலையில் தான் ஓசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு என்பது கர்நாடகா அரசுக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்தால் அது கர்நாடகாவின் பொருளாதாரத்துக்கும், குறிப்பாக பெங்களூருவின் வளர்ச்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என கர்நாடகா அரசு நினைத்தது. இதையடுத்து அடுத்த சில நாட்களிலேயே பெங்களூரில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.
அதுமட்டுமின்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இடம் தேர்வு செய்யும் பணியும் விரைவுப்படுத்தப்பட்டது. 4,500 ஏக்கர் முதல் 5,000 ஏக்கர் நிலம் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்பதால் அதன்படி பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைப்பதற்கு மைசூர் ரோடு, ஹாரோஹள்ளி, சோமனஹள்ளி, பிடதி, டாபஸ் பேட்டை, குனிகல், கனகபுரா உள்பட 7 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன
இந்நிலையில் தான் பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக நேற்று விதான சவுதாவில் (கர்நாடகா தலைமை செயலகம்) உயர்மட்ட அளவில் மீட்டிங் என்பது நடந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர்கள் எம்பி பட்டீல், பிரியங்க் கார்கே மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். ஓசூரில் தமிழ்நாடு அரசு விமான நிலையம் அமைக்கிறது என்பதற்காக 2வது விமான நிலையம் அமைக்கக்கூடாது. சர்வதேச தரத்தில் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையத்தை உருவாக்க வேண்டும் டிகே சிவக்குமார் கூறினார்.
இந்த மீட்டிங்கில் பெங்களூரில் விமான நிலையங்கள் அமைக்க கூடிய சாத்தியம் உள்ள 7 இடங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. குறிப்பாக பெங்களூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு நேர்எதிராக தெற்கு பெங்களூரில் உள்ள சோமனஹள்ளி கிராமத்தில் 2வது விமான நிலையத்தை அமைக்கலாம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சோமனஹள்ளி அருகே உள்ள ஹாரோஹள்ளியை எடுத்து கொண்டால் அங்கு தொழில் நிறுவனங்களுக்காக அதிகளவில் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. ஆனாலும் இன்னும் கூட 3 ஆயிரம் ஏக்கர் காலி நிலங்கள் உள்ளதால் அங்கு விமான நிலையத்தை அமைப்பது பற்றி பரிசீலனை செய்யப்பட்டது.
மேலும் பிடதியில் சமதளமான நிலப்பரப்பு இல்லை என்று கூறப்பட்டது. ஏற்ற இறக்கங்களுடன் நிலப்பரபு அமைந்துள்ளது. சமதளமான பரப்பு இருந்தால் மட்டுமே விமானம் தரையிறங்கி மீண்டும் வானில் பறக்க ஏதுவாக இருக்கும் என்பதால் பிடதியில் விமான நிலையம் அமைவதில் சிக்கல்இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர துமகூரு மாவட்டம் குனிகல் மற்றும் பெங்களூர் புறநகர் மாவட்டம் டாபஸ்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் புதிய விமான நிலையம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்த 2 இடங்களும் தற்போதைய பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தின் அருகே இருக்கிறது. இதனால் ஒரே இடத்தில் 2 விமான நிலையங்கள் அமைப்பதை கர்நாடகா அரசு விரும்பவில்லை. இது குனிகல், டாபஸ்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு நெகட்டிவ்வாக பார்க்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதில் மாநில அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆனாலும் கூட பெங்களூரில் 2வது விமான நிலையத்தை கனகபுரா ரோட்டில் அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கனகபுரா ரோடு என்பது பெங்களூரின் தெற்கு பகுதியில் உள்ளது. இந்த இடம் என்பது துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் சொந்த கிராமமான கனகபுரா அருகே வரும். தனது கிராமத்தின் அருகே விமான நிலையத்தை கொண்டு வருவதில் டிகே சிவக்குமார் உறுதியாக உள்ளதால் அந்த இடம் பைனல் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும் தற்போது வரை இறுதி முடிவு என்பது எடுக்கப்படவில்லை. மாநில அரசு முதலில் இந்த இடத்தை அடையாளம் கண்டபிறகு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் அதுபற்றி தெரிவித்து ஆய்வுக்கு அழைக்கும். மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தில் 2வது விமான நிலையம் என்பது அமையும்.
இதுபற்றி உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் எம்பி பட்டீல் கூறுகையில், ‛‛2வது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. இதுபற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். அடுத்த வாரத்துக்குள் இடம் உறுதி செய்யப்படும். டாபஸ்பேட்டை, நெலமங்களா, பிடதி, ஹாரோஹள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கும் எண்ணம் உள்ளது. இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை'' என்றார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications