பகலில் IT வேலை.. இரவில் வாடகை கார் ஓட்டும் இன்ஜினியர்கள்.. பெங்களூரில் மாறி வரும் டிரெண்ட்.. பின்னணி
சென்னை: இந்தியாவின் ‛சிலிக்கான் வேலி' என அறியப்படும் பெங்களூரில் பிரபலமான ஐடி நிறுவனங்களில் பகலில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றும் இளைஞர்கள் பலரும் இரவில் ஓலா, ஊபர் உள்பட பல வாடகை கார் நிறுவனங்களில் பணியாற்றுவது அதிகரித்து வருகிறது. ஐடி துறையில் நல்ல சம்பளம் பெறும் இவர்கள் இரவில் டிரைவர் வேலை செய்வதன் பின்னணி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர்.. பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நகரமாக உள்ளது. இதனால் தான் இந்தியாவின் ‛சிலிக்கான் சிட்டி' என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஐடி நிறுவனங்களில் கைநிறைய சம்பளம் வாங்கும் இளைஞர்கள் இரவில் வாடகை கார்கள் ஓட்ட தொடங்கி உள்ளனர். இது தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.

பெங்களூரில் நீங்கள் வாடகை கார், பைக் டாக்ஸி ‛புக்' செய்து செல்லும்போது அதன் ஓட்டுநரிடம் பேச்சு கொடுங்கள். அவர்கள் பெரிய பெரிய கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றுவோர் போல் சரளமாக ஆங்கிலத்தில் பேசலாம். அப்படியென்றால் அவர்களிடம் கேட்டு பாருங்கள். நிச்சயமாக அவர்கள் ஏதாவது பிரபலமான நிறுவனங்களில் பணியாற்றி கொண்டிருக்கலாம். ஏனென்றால் இதுதான் தற்போது பெங்களூரில் டிரெண்ட்டிகாக உள்ளது.
அதாவது ஐடி நிறுவனங்களில் பணியாற்றி கைநிறைய சம்பாதித்தாலும் கூட பல இளைஞர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். 8 மணிநேரம் கடந்த வேலை, பெரிய பெரிய அபார்ட்மென்ட்டில் தனிமையான வாழ்க்கை உள்ளிட்டவை ஐடி துறையில் ஊழியர்களுக்கு மனச்சோர்வை அளிக்கிறது. இதனை தவிர்க்க தற்போது பல இன்ஜினியர்கள் இரவில் வாடகை கார்களை ஓட்ட தொடங்கி உள்ளனர்.
விஜயவாடாவை சேர்ந்த 27 வயது அபினவ் ரவீந்திரன் பெங்களூர் சுத்தகுண்டே பாளையில் வீடு எடுத்து தங்கி ஐடி நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவருக்கு நல்ல சம்பளம் தான். ஆனால் அவர் தினமும் இரவு நேரத்தை அவர் தனிமையில் கடக்க வேண்டி இருந்தது. இதனால் அவர் தற்போது ‛நம்ம யாத்ரி' வாடகை கார் ஓட்டி வருகிறார். பகலில் ஐடி வேலை செய்யும் அவர் இரவில் டாக்ஸி டிரைவராக இருக்கிறார்.
அனைத்து நாட்களிலும் அவர் இரவில் கார் ஓட்டுவது இல்லை. வாரத்தில் சில நாட்கள் மனஅழுத்தத்தை தவிர்க்க வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்த வேளயைில் காரில் பயணம் செய்வோரிடம் அவர் மனம்விட்டு பேசுகிறார். இதனால் ரிலாக்ஸாக உணர்வதாக அவர் கூறுகிறார். அதேபோல் இன்னும் பல ஐடி ஊழியர்கள் ஓலா, உபர், ராபிடோ மற்றும் நம்ம யாத்ரி போன்றவற்றில் டிரைவராக பதிவு செய்து வாகனங்கள் ஓட்டி வருகின்றனர்.
நம்மில் பலரும் அவர்கள் அதிகப்படியான பணம் சம்பாதிக்க இதனை செய்வதாக கூறினாலும் கூட உண்மையில் அவர்கள் தனிமையை போக்க இப்படி செய்து வருகின்றனர். இதுபற்றி கர்நாடக மாநில ஆட்டோ மற்றும் டாக்ஸி கூட்டமைப்பின் தலைவர், ஓலா உபர் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான தன்வீர் பாஷா கூறுகையில், ‛‛ பெங்களூருவில் டாக்ஸி ஓட்டுநர்களாக சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இருப்பதை கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு யாரையும் தெரியாது. ஏனென்றால் ஐடி ஊழியர்கள் யாரும் எங்களின் தொழிற்சங்கத்தில் பதிவு செய்வது இல்லை.
அவர்களுக்கு போதிய அளவு பணம் இருப்பதால் அவர்களுக்கு எங்களின் ஆதரவும் இல்லை. அதேபோல் அவர்கள் நன்கு படித்து ரூல்ஸை அறிந்து வைத்துள்ளார்கள். இதனால் துணிச்சலாக இந்த பணியை செய்கிறார்கள். உண்மையில் படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் வாடகை கார் ஓட்டி மக்களுக்கு நல்ல முறையில் சேவையாற்றுவதை நாங்கள் வரவேற்கிறோம்'' என்றார். பெங்களூர் மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் பகலில் ஐடி வேலை செய்யும் பலரும் இரவில் வாடகை கார் ஓட்டி வருவது இங்கு கவனிக்கத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications