Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடித்து நொறுக்கும் காங்.. அமைதியாக இருக்கும் பாஜக! கிட்ட நெருங்கும் கர்நாடக தேர்தல்! பிளான் என்ன

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடக்கிறது. எப்போதுமே தேர்தல் என்றாலே அதிரடியாகக் களமிறங்கும் பாஜக, இம்முறை அங்கே அமைதியாகவே இருந்து வருகிறது. அதற்குக் காரணத்தைப் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு வரும் மே 10ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் அங்கு எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் பாஜக மிக உறுதியாக உள்ளது. இதனால், பாஜக பார்த்துப் பார்த்து வேலை செய்து வருகிறது.

 கர்நாடகா

கர்நாடகா

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலைக் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஏற்கனவே அறிவிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், ஆளும் பாஜக அவசரப்படாமல், வேட்பாளர்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வருகிறது. இதற்காகத் தலைமை நிர்ணயித்துள்ள முழு செயல்முறைகளையும் அவர்கள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது முடிந்த பின்னரும் உடனடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட மாட்டார்களாம். முதலில் உத்தேச வேட்பாளர் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி, அவர்களின் பரிந்துரைக்குப் பின்னரே இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளனர்.

 கோர் கமிட்டி கூட்டம்

கோர் கமிட்டி கூட்டம்

இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் தனித்தனியாக மூன்று கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் குறித்த அங்கே உள்ளூரில் இருக்கும் தலைவர்களிடம் ரகசியமாகக் கருத்துக் கேட்டுள்ளனர். இதற்காக மாவட்ட அளவிலான கோர் கமிட்டி கூட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. ஓரிரு நாளில் கருத்துகள் சேகரிக்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வரும் ஏப்ரல் 4ஆம் தேதி பாஜக நாடாளுமன்றக் குழு கூட இருக்கிறது.

 அமித் ஷா

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடந்த மார்ச் 26ஆம் தேதி கர்நாடகா சென்றிருந்தபோது, ​ கோர் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். தேர்தலில் சீட் கிடைப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தேர்தலைச் சந்திக்கத் தேவையான அடிப்படை வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் அமிஷ் ஷா கூறியதாகத் தெரிகிறது. கர்நாடக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவும் இதே கருத்தைக் கூறியுள்ளார். 3 சர்வே நடத்தியுள்ளதை உறுதி செய்த அவர், பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு, யாருக்கு எந்த இடம் என்பதை டெல்லி தலைமை முடிவு செய்யும் என்றார்.

 டெல்லி தலைமை

டெல்லி தலைமை

கடந்த மார்ச் 29ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கேட்ட போது அவர், "பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தாலுகா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பரிந்துரைகள் கூடிய ஆய்வு அறிக்கை எங்களிடம் உள்ளது. இந்த விவகாரங்களைக் கொண்ட முழுமையான பட்டியல் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும், அதற்கு ஒரு வாரம் ஆகலாம். அதன் பின்னரே வேட்பாளர் பட்டியல் வெளியாகும்" என்று தெரிவித்தார்.

 அடித்து நொறுக்கும் காங்கிரஸ்

அடித்து நொறுக்கும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி அடித்து நொறுக்கிக் கொண்டு தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. கடந்த மார்ச் 25ஆம் தேதி காங்கிரஸின் 124 பேரைக் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால், பாஜக பொறுமையாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அவர்கள் இதற்காக சீக்ரெட் வாக்கெடுப்பும் நடத்தியுள்ளனர். இருப்பினும், சில உள்ளூர் தலைவர்கள் இந்த தகவல்கள் வெளிப்படையாகச் சொல்வதும் பாஜகவுக்குத் தர்ம சங்கடத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது.

எடியூரப்பா

எடியூரப்பா

எடியூரப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உட்பட 30 சதவீத எம்எல்ஏக்கள் மற்றும் வழக்குகளை எதிர்கொள்ளும் எம்எல்ஏக்களுக்கு சீட் கிடைக்காது என்று கடந்தாண்டே கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்பதால் அனைத்து சிட்டிங் எம்எல்ஏக்களுக்கும் சீட் வழங்க வேண்டியது இல்லை என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையும் தெரிவித்துள்ளார். கர்நாடக பாஜகவின் முகமாக இருந்த எடியூரப்பா இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார்.

 காங்கிரஸ் அதிருப்தியாளர்கள்

காங்கிரஸ் அதிருப்தியாளர்கள்

ஆனால், அவரது மகன் பி ஒய் விஜேந்தர் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் சிவமொக்கா மாவட்டத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எந்த இடம் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேபோல கடந்த 2019இல் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து 11 எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமானார்கள். பாஜக ஆட்சி அமைக்க இவர்களே காரணமாக இருந்தனர். அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் சீட் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அதேநேரம் இவர்களுக்கு சீட் கிடைத்தால் கட்சிக்கு நீண்ட காலம் உழைத்தவர்களும் அதிருப்தியடையலாம் என்பதால் அதையும் பாஜக கவனத்தில் கொண்டே இருக்கிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

கர்நாடகாவில் இப்போது வரை கர்நாடகா மற்றும் ஜேடிஎஸ் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. எந்த தொகுதியில் வெல்ல வாய்ப்புகள் அதிகமோ அந்த தொகுதிகளில் முதற்கட்ட வேட்பாளர்களைக் காங்கிரஸ் வெளியிட்டது. கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்குகள், சர்வே, உள்ளூரில் கட்சியின் நிலை எனப் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டுள்ளனர். காங்கிரஸ் தனது 69 சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 60 பேருக்கும், 2018இல் இரண்டாவதாக வந்த 64 பேருக்கும் இந்த முறை போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.

அமைதி

அமைதி

காங்கிரஸ் கட்சியும் கூட விரிவான ஒரு செயல்முறைக்குப் பின்னரே தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். சீட் கிடைக்கவில்லை என்றாலும் கட்சிக்காக பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தனது நிர்வாகிகளிடம் கேட்டுப் பெற்றதாகத் தெரிகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 124 இடங்களில் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளவர்களிடம் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் நேரடியாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், முழு அறிவிப்பு வந்தவுடன் அங்கும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+