டிகே சிவக்குமார் மட்டுமே துணை முதல்வர்! ‛கேன்சல்’ ஆன 2 பேரின் பதவி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தவுடன் 3 துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. ஆனால் இன்று டிகே சிவக்குமார் மட்டும் ஒரேயொரு முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 துணை முதல்வர்கள் நியமனம் இல்லை என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ள நிலையில் அதன்பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் கண்வைத்து காய்நகர்த்தி வந்தனர். இறுதியில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் முதல்வர் பதவியை வழங்கியது. டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று மதியம் டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளருமான கேசி வேணுகோபால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவித்தார்.
அப்போது கேசி வேணுகோபால், ‛‛கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒரேயொரு துணை முதல்வராக டிகே சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வர் பதவியோடு டிகே சிவக்குமார் மாநில காங்கிரஸ் தலைவராக நாடாளுமன்ற தேர்தல் வரை தொடருவார். இவர்கள் 2 பேரும்20ம் தேதி பதவியேற்க உள்ளனர்'' என்றார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்த சமயத்தில் மொத்தம் 3 துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதாவது பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ள லிங்காயத் சமுதாயம், தலித், இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஒரேயொரு துணை முதல்வர் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.

அதாவது சித்தராமையாவுக்கு பதில் டிகே சிவக்குமார் முதல்வராக முடிவு செய்து முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் மூத்த தலைவர், அனைத்து சமுதாய மக்களிடம் பிரபலமாக உள்ள சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடத்தால் புறக்கணிக்க முடியவில்லை. இதனால் டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மேலும் சித்தராமையாவை போல் டிகே சிவக்குமார் தன்னை உயர்ந்த தலைவராக காட்ட விரும்புகிறார்.
இவருடன் சேர்த்து மேலும் 2 பேர் துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் 3 துணை முதல்வர்களில் ஒருவர் தான் டிகே சிவக்குமார் என்ற பேச்சு வரும். மேலும் உரிய மரியாதையும் கிடைக்காத நிலை உருவாகும். இதனை டிகே சிவக்குமார் தரப்பும் கட்சி மேலிடத்திடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் மேலிடம் அவரை ஒரேயொரு துணை முதல்வராக நியமனம் செய்துள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கு அடுத்ததாக துணை முதல்வர் என்ற முறையில் டிகே சிவக்குமார் அதிகாரம் படைத்த நபராக வலம் வருவார். இதனால் தான் காங்கிரஸ் மேலிடம் டிகே சிவக்குமாரை மட்டுமே துணை முதல்வராக்கி உள்ளது. மாறாக 2 துணை முதல்வர் பதவியை தற்போது கைவிட்டுள்ளது.
இருப்பினும் கூட தற்போதைய சூழலில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாரும் முதல்வராக செயல்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை இது நடக்கும் பட்சத்தில் டிகே சிவக்குமார் முதல்வராகும்போது பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கத்தில் 3 பேர் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இது சாத்தியமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications