சொல்ல சொல்ல கேக்கலியே மனைவி.. கதவை உடைத்துக்கொண்டு நுழைந்த கணவன்.. அங்கே பார்த்தால்.. அட கடவுளே
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் ஆனேகல் தாலுகாவை குலைநடுங்க வைத்து வருகிறது. என்ன நடந்தது?
பெங்களூர் புறநகரில் ஆனேகல் தாலுகா உள்ளது.. இந்த பகுதியில் ஜிகானி என்ற நகர் உள்ளது.. இங்கே வசித்து வருகிறார் முபாரக்.. 28 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் அர்பியா தாஜ்.. 24 வயதாகிறது.

மனைவி: இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, தன்னுடைய அம்மா வீட்டுக்கு கிளம்பி சென்றார் அர்பியா.. ஒரு வாரத்தில் திரும்பி வந்துவிடுவதாக சொல்லிவிட்டு போனார்.. ஆனால், ஒரு மாதமாகியும் திரும்பி வரவேயில்லை. அதனால், முபாரக் மனைவியை அழைத்துக் கொண்டு வருவதற்காக, தன்னுடைய மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அங்கே மாமியார் வீட்டுக்கு போனதுமே, முபாரக்கை பார்த்த அர்பியா ஓடிவந்து கதவை அடைத்துக் கொண்டார்.. தன்னுடன் அழைத்து செல்வதற்காக வந்திருக்கிறேன் என்று முபாரக் சொல்லியும், அர்பியா கதவை உள்பக்கமாக சாத்திக் கொண்டு திறக்கவேயில்லை. "நான் உங்களுடன் வீட்டிற்கு வரமாட்டேன்" என்று முபாரக்கிடம் சொல்லியிருக்கிறார்..
முபாரக்: இதைக்கேட்டு அதிர்ந்து போன முபாரக் கதவை பலமுறை ஓங்கி தட்டியுள்ளார்.. பலமுறை சத்தமாக அர்பியா பெயரை சொல்லி அழைத்துள்ளார்.. ஆனாலும், மனைவி கதவை திறக்கவேயில்லை..

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த முபாரக், வெளியே வாசலில் கிடந்த கோடாரியை எடுத்து வந்து, கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் ஆவேசமாக சென்றார்... தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த அர்பியாவை, அதே ஆவேசத்துடன் கோடாரியால் சரமாரியாக வெட்டிவிட்டார்.. இதனால் அர்பியா அலறி அடித்து கொண்டு கீழே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்துவிட்டார்..
தற்கொலை: அந்த சத்தம் கேட்டு, கிச்சனிலிருந்து அர்பியாவின் அம்மா ஓடிவந்தார்.. மகளின் கோலத்தை பார்த்து கதறிதுடித்து அழுதார்.. ஆனால், அதற்குள் முபாரக் ஓடிச்சென்று, பெட்ரூம் கதவை பூட்டிக்கொண்டு, கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.. இதனால், சுருண்டு அதே இடத்தில் விழுந்து துடிதுடித்து உயிருக்கு போராடினார் முபாரக்.
இதையடுத்து, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். அர்பியாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முபாரக்கைமீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர் இப்போது சீரியஸாக இருக்கிறாராம்.
மறுப்பு: இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்... தம்பதிக்குள் என்ன தகராறு என்றே தெரியவில்லை.. எதற்காக கணவருடன் செல்ல அர்பியா மறுத்தார் என்றும் தெரியவில்லை..
மாமியார் வீட்டிற்கு சென்றபிறகுதான் அர்பியா நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டதாக கூறுகிறார்கள்.. எனினும், விசாரணை முடிந்தால்தான் இதுகுறித்த உண்மைத்தன்மை தெரியவரும். ஆனால், எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில், நடந்து முடிந்துவிட்டது..!!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications