மாமியாருடன் நெருக்கம்.. திடுக்கிட்ட கணவர்.. விசாரிக்ககூட இல்லையாம்.. ஆடிப்போன கர்நாடகா.. அட பாவமே
பெங்களூரு: முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், ராம்துர்கா தாலுகாவில் உள்ளது தன்னாலா என்ற கிராமம்... இங்கு வசித்து வருபவர் ஃபாக்கீரப்பா... இவருடைய மருமகன் பெயர் நீலப்ப ரோகண்ணாவர்.. 28 வயதாகிறது.
சம்பவத்தன்று, கட்டகோலா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார் ஃபாக்கரப்பா.. பைக்கில் சென்றபோது, மருமகனுக்கு விபத்து ஏற்பட்டதாகவும், அதில், மருமகன் ஸ்பாட்டிலேயே உயிரிழந்து விட்டதாகவும் பதறியபடியே சொன்னார்..

இதையடுத்து போலீசாரும், புகார் குறித்து வழக்கு பதிவு செய்ததுடன், விபத்து தொடர்பான விசாரணையையும் கையில் எடுத்தனர்.. விபத்தில் உயிரிழந்த நீலப்ப ரோகண்ணாவர் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பி வைத்தனர்.
போஸ்ட் மார்ட்டம்: பின்னர் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், நீலப்ப ரோகண்ணாவர் விபத்தில் இறக்கவில்லை என்றும், மாறாக, அவரது கழுத்து நெரிக்கப்பட்டதால் எலும்புகள் முறிந்து இறந்ததாகவும் ரிப்போர்ட் வந்தது.. இதை பார்த்து அதிர்ந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தனர். அப்போதுதான், இதில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே வந்தது.
மருமகன் நீலப்ப ரோகண்ணாவருக்கும், தன்னுடைய மனைவிக்கும் தகாத உறவு இருப்பதாக ஃபாக்கீரப்பாவுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.. மாமியார் என்றுகூட பார்க்காமல், தன்னுடைய மனைவியிடம் நெருங்கி பழகுகிறாரே என்று மனதுக்குள் ஆத்திரப்பட்டு வந்தாராம்.
விசாரணை: ஆரம்பத்தில் ஏற்பட்ட சந்தேகம், நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வந்த நிலையில், உண்மையிலேயே மனைவிக்கும், மருமகனுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக நம்பியிருக்கிறார் ஃபாக்கீரப்பா. கடைசியில், மருமகனை கொலை செய்யவும் முடிவெடுத்துள்ளார்.
இதற்காகவே, சம்பவத்தன்று, அவரை பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.. யாருமில்லாத இடத்தில் வைத்து, மருமகனின் கழுத்தை நெரித்தே கொன்றுள்ளார் ஃபாக்கீரப்பா.. அதற்கு பிறகுதான், விபத்தில் மருமகன் இறந்துவிட்டதாக போலீசுக்கு தகவல் வந்துள்ளது தெரியவந்தது. இபபோது, ஃபாக்கீரப்பாவை கட்டகோலா போலீஸார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
மருமகன்: சொந்த மருமகனையே மாமனார் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு விபத்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதையுமே தீர விசாரிக்காமல், தன்னுடைய மகளை பற்றியும் யோசிக்காமல், சந்தேகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு, ஒரு கொலையும் செய்துவிட்ட முதியவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications