ஜெயலலிதா இருந்தாரே.. பரப்பன அக்ரஹாரா சிறை! அது மீண்டும் கவனம் பெறுது! ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
பெங்களூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அடைக்கப்பட்ட சிறை கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை. தற்போது அதே சிறை மீண்டும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி மைக்கேல் டி குன்கா இந்த வழக்கில் மிகவும் கடுமையாக, நேர்மையாக செயல்பட்டு, ஜெயலலிதா தரப்பை கேள்விகளால் துளைத்தார்.

பரப்பன அக்ரஹாரம்: இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது எல்லோரும் வைத்த குற்றச்சாட்டு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் சரியாக வாதம் செய்யவில்லை என்பதுதான். ஒரு காலத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் எல்லாம் மிக சிறப்பாக வாதம் செய்வார்கள். ஆனால் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் அப்படி வாதம் செய்யவில்லை என்று புகார் எழுந்தது.
இதை தெரிந்து கொண்ட ஜெயலலிதா உடனடியாக தனக்கு மாற்று வழக்கறிஞர் வேண்டும் என்றார். இதற்காக அவர் அழைத்து வந்த வழக்கறிஞர்தான் 90 வயது நிரம்பிய ராம் ஜெத்மலானி. அவர் வந்த பின் கர்நாடக ஹைகோர்ட்டில் இந்த வழக்கின் போக்கே மாறியது என்று கூட கூறலாம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இவர் ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம்.
இந்த வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டு இருந்தார். அங்கே அவர் இருந்த போது இந்த சிறையே தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க கவனம் பெற்றது.
மீண்டும் கவனம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அடைக்கப்பட்ட கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை. தற்போது அதே சிறை மீண்டும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த டாப் தலைகள் இப்போது இங்கே சிறை வைக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவை உலுக்கிய ரேணுகாசாமி கொலை வழக்கில் தற்போது தர்ஷன் கைதாகி உள்ளார். நடிகர் தர்ஷன் தனது காதலியை கிண்டல் செய்தவரை கொன்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இதில் கொலை செய்யப்பட்டவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் தர்ஷன் தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் தான் உள்ளார்.
கொலை வழக்கு தொடர்பாக கன்னட நடிகர் "டி பாஸ்" தர்ஷன் போலீஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு உள்ளார். நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிய ரேணுகா சாமி என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேனுகா சாமி சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த ரேணுகா சாமி, சித்ரதுர்காவை சேர்ந்த மெடிக்கல் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார். இவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை மெசேஜாக அனுப்பி உள்ளார். இந்த பவித்ரா கவுடா கடந்த 10 வருடமாக தர்ஷன் உடன் காதலில் இருக்கிறார்.
பவித்ராவும் இதே சிறை: இதே வழக்கில் பவித்ராவும் தற்போது இதே சிறையில் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இது போக ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன், எச் டி ரேவண்ணாவின் மகன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணா இதே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ப்ரஜ்வால் ரேவண்ணா பல பெண்களை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ப்ரஜ்வால் ரேவண்ணா மட்டுமல்லாமல் பல ஆண்கள் இந்த வீடியோக்களில் உள்ளனர். இதில் பல வீடியோக்களை ரேவண்ணாவே எடுத்துள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண்கள் பலரும் கதறும் வீடியோக்கள்,. பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வீடியோக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டல் ஆக இந்த சம்பவம் மாறி உள்ளது. ப்ரஜ்வால் ரேவண்ணா இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவருக்கு எதிராக தனி எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இதில்தான் அவர் தற்போது பரப்பன அக்ரஹாரத்தில் உள்ளார்.
சுராஜ் ரேவண்ணா: இது போக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ப்ரஜ்வல் ரேவண்ணா கைதான நிலையில் தற்போது அவரின் சகோதரரும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) எம்.எல்.சி.யுமான சூரஜ் ரேவண்ணாவ போலீசார் கைது செய்துள்ளனர். கட்சித் தொண்டர் ஒருவரை இவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடகா காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
இந்த வழக்கிலும் தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளார். சசிகலா இதே சிறையில்தான் 4 வருடம் இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அடைக்கப்பட்ட கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை தற்போது மீண்டும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications