அப்பா.. நீங்க தப்பானவர்.. வாழ்க்கையை சீரழிச்சிட்டீங்க.. மெசேஜ் அனுப்பிவிட்டு 3 பேர் தற்கொலை!
இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்
பெங்களூரு: தங்களின் தற்கொலைக்கு அப்பாதான் காரணம் என்று வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டு, தாய், தங்கையுடன் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரியஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் சித்தய்யா. இவர் மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு மானசா என்ற 17 வயது மகளும், பூமிகா என்ற 15 வயது மகளும் உள்ளனர்.

சித்தய்யாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. விஷயம் ராஜேஸ்வரிக்கு தெரிந்ததுமே கணவனிடம் கோபத்தில் சண்டை போட்டுள்ளார். ஆனால் கள்ளக்காதலை கணவன் விடவே இல்லை. தொடர்ந்து மனைவி கேள்வி எழுப்பவும், சித்தய்யா கோபமடைந்து தன் கள்ளக்காதலியுடன் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்.
காதலியுடன் வீட்டை விட்டே கணவன் போய்விட்டதால், ராஜேஸ்வரி கடுமையான அதிர்ச்சி அடைந்தார். அவர் மட்டுமல்ல.. வயதுக்கு வந்த 2 மகள்களும் மனம் நொந்து போனார்கள். அதனால் எல்லாருமே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதனால் மூத்த மகள் மானசா, தனது தாய் மாமனுக்கு, அதாவது ராஜேஸ்வரியின் அண்ணனான புட்டசாமிக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினார்.
அதில், "ஒவ்வொருவருக்கும் நல்ல அப்பா கிடைக்கவேண்டும். அப்படி கிடைத்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். எங்கள் சாவுக்கு அவர்தான் காரணம்'' என்று இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், பதறியடித்துக் கொண்டு சகோதரி வீட்டுக்குச் சென்றார். ஆனால் வீடு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. உடைத்துக் கொண்டு சென்று பார்த்தால், தூக்கில் 2 மகள்களுடன் தங்கை சடலமாக தொங்கிகொண்டிருந்தார். அவர்களை பிடித்து கதறி அழுதார் புட்டசாமி. உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி விசாரணையை நடத்தி வருகின்றனர்.
-
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications