ஜெகதீஷ் ஷெட்டர் நிபந்தனை வைத்தாரா? கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பரபர விளக்கம்
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் எந்த நிபந்தனையும் வைக்க மாட்டார் என்றும் நாங்கள் அவருக்கு எந்த பொறுப்பையும் கொடுக்கவில்லை என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்பு மனு தாக்கல் துவங்கி விட்ட போதிலும் பாஜக, காங்கிரஸ், ஜேடி (எஸ்) என பிரதான கட்சிகள் அங்கு இன்னும் முழுமையாக வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் உள்ளது.

இதற்கு கட்சி மேலிடங்கள் சிலருக்கு வாய்ப்பு கொடுக்க மறுப்பதும், அதை ஏற்க மறுத்து சில முக்கிய பிரமுகர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆளும் பாஜகவிற்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பாரதிய ஜனதா பல சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து புதிய முகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தது.
கட்சியின் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சமண் சவதி போன்றோருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால், மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. லட்சுமண் சவதி, பாஜகவை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஜெகதீஷ் ஷெட்டரும் தனக்கு கண்டிப்பாக போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால், அவரது கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்துவிட்டது. இதனால், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று இரவு பெங்களூருவிற்கு வருகை தந்தார்.
காங்கிரஸ் கட்சியில் ஜெகதீஷ் ஷெட்டர் இணைய இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், எதிர்பார்த்தது போலவே ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெகதீஷ் ஷெட்டர், முழு மனதுடன் நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா, ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் என்னை தொடர்பு கொண்டனர்.

உடனே சிறிதும் யோசிக்காமல் நான் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு எடுத்துவிட்டேன். பாஜகவில் மூத்த தலைவராக இருந்த எனக்கு தேர்தலில் டிக்கெட் கிடைக்கும் என நான் நினைத்தேன். ஆனால், எனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். பாஜக தலைவர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை, என்னை சமாதானப்படுத்தவும் முயற்சிக்கவில்லை" என்றார்.
ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், "காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் எந்த நிபந்தனையும் வைக்க மாட்டார். நாங்கள் அவருக்கு எந்த பொறுப்பையும் கொடுக்கவில்லை. கட்சியின் கொள்கைகள் மற்றும் தலைமையை ஏற்று ஜெகதீஷ் ஷெட்டர் சேர்ந்துள்ளார். நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க நாங்கள் விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே அது சாத்தியப்படும்" என்றார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications