Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சைக்கொடி".. எல்லாத்துக்குமே ரெடியான பாஜக.. பின்னாடியே காங்கிரஸ்.. அப்ப மெஜாரிட்டி இவருக்குத்தானா?

Subscribe to Oneindia Tamil

பெங்களுரு: குமாரசாமி கிங் மேக்கரா மாறுவாரா என்ற எதிர்பார்ப்பு கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ளது.. பாஜக + காங்கிரஸ் இரு தரப்பினருக்குமே குமாரசாமியை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படலாம் என்கிறார்கள்.

மற்ற மாநிலங்களை காட்டிலும், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது கடினமாகவே இருந்து வந்துள்ளது. அதற்கு காரணம், பாஜக + காங்கிரஸையும் தாண்டி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வளர்ச்சிதான்.. பழைய மைசூரு பகுதியில் இவர்களுக்கான செல்வாக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

Will Kumaraswamy emerge as a kingmaker and kumaraswamy offers pact but with many conditions

61 தொகுதிகள்: ஒவ்வொரு முறை தேர்தலின்போதும் வெற்றிகளை தீர்மானிப்பது 61 தொகுதிகளை கொண்ட பழைய மைசூரு பகுதியே, அடுத்த ஆட்சி அமைக்க போவது யார் என்பதை தீர்மானித்து வருகிறது... அதுபோலவே இந்த முறையும் பழைய மைசூரு பகுதி கவனத்தை ஈர்த்து வருகிறது... அத்துடன், வழக்கம்போல், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கியத்துவமும் இந்த முறை அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது..

கணிப்புகள்: தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட்டப்பேரவையே அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து 2 கட்சிகளும் தங்களிடம் பேசி வருவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளிப்படையாகவே கூறி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

அதற்கேற்றவாறு இரு கட்சிகளுமே திரைமறைவில் பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளதாக தெரிகிறது. அதிலும், காங்கிரசுக்கு முதல் எதிரியே பாஜக என்பதால், இந்த முறையும் ஆட்சியை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.. இதன்காரணமாகவே குமாரசாமியின் ஆதரவை பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் அல்லது அவரது தலைமையில் புதிய அரசு அமைய காங்கிரஸ் சம்மதிக்கக்கூடும் என்று தெரிகிறது.

அதேபோல, பாஜகவை பொறுத்தவரை, கடந்த தேர்தலை போலவே, இந்த முறையும் மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை இழுப்பதற்காக தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்..

Will Kumaraswamy emerge as a kingmaker and kumaraswamy offers pact but with many conditions

பாஜகவுக்கு வாய்ப்பு: ஆட்சி அமைப்பதில், எப்போதுமே பாஜகவுக்கு தேர்தலுக்கு முந்தைய வழிகள், தேர்தலுக்கு பிந்தைய வழிகள் என்ற 2 வழிகளை கையாளும்.. அதனால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டுமெனில், அது மெஜாரிட்டி இடங்களைக் கைபற்ற வேண்டியிருக்கிறது.. தங்களுக்கு மெஜாரிட்டியே இல்லாவிட்டாலும், தொங்கு சட்டசபை ஏற்பட்டால், அதுவும் பாஜகவுக்குதான் வாய்ப்பாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். அந்தவகையில், குமாரசாமி தரப்பினரிடம் பாஜக திரைமறைவில் பேச்சை ஆரம்பித்துள்ளனர் என்கிறார்கள்..

அதுவும் இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதால், முதல்வர் பதவியைகூட குமாரசாமிக்கு விட்டுக் கொடுக்கவும் பாஜக தயங்காது என்றும் சொல்கிறார்கள்..

குமாரசாமி முடிவு: இதில் குமாரசாமி என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.. இப்போது திடீரென சிங்கப்பூர் சென்றுள்ளார்.. தொங்கு சட்டமன்றம் என்கிற நிலை ஏற்படும் பட்சத்தில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சேருவது குறித்து காங்கிரஸுடனும், பாஜகவுடனும் ரகசியப் பேச்சவார்த்தை நடத்துவதற்காகவே அவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார் என்கிறது ஒரு தரப்பு.. ஆனால், கருத்துக்கணிப்புகளில் எதிலுமே தங்கள் கட்சிக்கு சாதகமாக ரிசல்ட் வரவில்லை என்பதால், அப்செட்டில் சிங்கப்பூர் சென்றிருக்கிறார்கள் என்றது இன்னொரு தரப்பு..

Will Kumaraswamy emerge as a kingmaker and kumaraswamy offers pact but with many conditions

கறார்தன்மை: ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், ஓய்வுக்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார்கள் என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.. எனினும் குமாரசாமி இப்பவே கறார் காட்ட துவங்கிவிட்டர். "ஒத்து வந்தால் தான் கூட்டணி" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். பாஜக, காங்கிரஸ் 2 பேருமே தங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லி பகீரை கிளப்பி விட்டுள்ளார்..

அதாவது, "முதல்வர் பதவியுடன், நீர்ப்பாசனம், பொதுப்பணித்துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். கூட்டணி ஆட்சியில் எந்த கட்சி மேலிடமும், தலைவர்களும் தலையிடக் கூடாது. கூட்டணி ஆட்சியில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கக் கூடாது. எந்த கொள்கை முடிவையும் எடுக்க தடை இருக்க கூடாது.
கண்டிஷன்கள்: ஜனதாதளம் (எஸ்) கட்சி கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். ஜனதாதளம் (எஸ்) கட்சியின் வாக்கு வங்கிகள் அதிகமுள்ள பழைய மைசூரு பகுதிகளில் கூட்டணி கட்சியினர் தலையிடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை குமாரசாமி விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் குமாரசாமி கூட்டணி அமைக்க போவதாகவும் சொல்லி உள்ளார்..

ஆகமொத்தம், இந்த தேர்தலை, மிகச்சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் பலே கணக்கு போட தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த கண்டிஷன்களுக்கு யார் சம்மதம் சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+