Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைய தொடங்கிய சூரியன்.. உயிர்த்தெழுமா சந்திரயான் 3 லேண்டரும், ரோவரும்? இன்றே கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இன்றுடன் நிலவில் சூரியன் அஸ்தமனமாகும் நாட்கள் தொடங்குவதால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர்த்தெழுமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

Will the Chandrayaan 3 lander and rover at the Moons South Pole be resurrected?

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

திட்டமிட்டபடி தனது வேலையை முடித்துக்கொண்ட பிரக்யான் ரோவர், தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. நிலவில் தற்போது பகல் பொழுது 95 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் இதுவரை லேண்டரையும், ரோவரையும் எழுப்ப மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இன்றுடன் நிலவில் சூரியன் அஸ்தமனமாகும் நாட்கள் தொடங்குகின்றன. எனவே இன்று லேண்டரரையும், ரோவரையும் எழுப்ப முடியாவிட்டால் அதை நிரந்தரமாக எழுப்ப முடியாமல் போகும் நிலை உருவாகும். எனவே இது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "சந்திரயான் 3 திட்டத்தின் நோக்கம் என்பது சரியான இடத்தில் தரையிறங்குவதுதான். நமக்கு முன்னர் விண்கலனை ஏவிய ரஷ்யாவும், பின்னர் விண்கலனை அனுப்பிய ஜப்பானுக்கும் இதுதான் நோக்கம்.

இதற்கு முன்னரும் பல நாடுகள் நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளன. ஆனால், அப்போது பின்பற்றப்பட்ட தொழில்நுட்பம் வேறு. இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் வேறு. பிற்காலங்களில் நிலவில் குடியிருப்புகள் உருவானால் அங்கு பொருட்களை கொண்டு செல்ல சரியான தொழில்நுட்பம் அவசியம். அதைதான் இஸ்ரோ முயன்று பார்த்திருக்கிறது. இந்த முயற்சி 100 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. அதற்கு நாம் நடத்திய ஆய்வுகள், அதில் கிடைத்த தகவல்கள் எல்லாம் போனஸ்தான். அந்த வகையில் லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியாவிட்டால் கூட சந்திரயான் 3 திட்டம் வெற்றிதான்" என்று கூறியுள்ளனர்.

அதேபோல இதை எழுப்புவதில் உள்ள சிக்கல்களை பற்றி கூறிய அவர்கள், "நிலவில் பகல் பொழுதுக்கும் இரவு பொழுதுக்கும் இடையே இருக்கும் வெப்ப வேறுபாடு ஏறத்தாழ 200 டிகிரி செல்சியஸ். சீனா போன்ற நாடுகள் அனுப்பிய விண்கலத்தில் இயற்கை கதிரியக்க மின்கலம் (பேட்டரி) பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் அது ஓராண்டு வரை செயல்படுகிறது. ஆனால் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் இதை நாம் பொருத்தி அனுப்பவில்லை. எனவே இவை இரண்டையும் மீண்டும் உயிர்ப்பிப்பது சவாலான பணி" என்று கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+