தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறிய எடியூரப்பா..கர்நாடகாவில் புது யுக்தி வகுக்கும் பாஜக..செம பிளான்!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற மத்திய பாஜக புது வியூகத்தை எடுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பாஜக -காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, தேர்தல் அரசியலில் இருந்து எடியூரப்பா வெளியேறுவதாக அறிவித்தது அம்மாநில பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லிங்யாத் சமுகத்தை சேர்ந்த செல்வாக்கு மிக்க தலைவரான எடியூரப்பாவின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில், சமுதாய தலைவர்களை அணுகுவதில் மத்திய பாஜக தலைமை புது யுக்திகளை வகுத்து செயல்படுவதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கர்நாடகாவில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டில் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது கர்நாடக சட்டசபையின் காலம் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல்

இந்த முறை அங்கு நான்கு முனை போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் எனும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தேர்தல் பணியை துவங்கி நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தனிப்பெரும்பான்மையை பெற அனைத்து கட்சியினரும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர்.

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம்

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம்

கர்நாடகாவில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தேர்தல் வேலையை தீவிரப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகா வருகை தந்து தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அடிக்கடி கர்நாடகாவிற்கு விசிட் அடித்து வருகின்றனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகாஜூன கார்கேவும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான். அதனால், காங்கிரஸ் கட்சிக்கு கூடும் வலு கிடைக்கும் என்பது அக்கட்சி போடும் கணக்காக இருக்கிறது.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக

குறிப்பாக கடந்த 20 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் கர்நாடகாவில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தலைவருமான எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கு பிறகு டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடகாவில் பெரும்பான்மையாக உள்ள சமுதாய தலைவர்களை நேரடியாக அணுக பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. டெல்லியில் கர்நாடக சங்கா சார்பில் நடைபெற்ற அம்ரித் மகோட்சவ் நிகழ்ச்சியில் இது கண்கூடாக பார்க்க முடிந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக கர்நாடகாவில் உள்ள முக்கிய மத தலைவர்கள் 5 பேர் கலந்து கொண்டனர்.

சாதிய தலைவர்களை அணுகும் பாஜக

சாதிய தலைவர்களை அணுகும் பாஜக

லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 3 முன்னணி தலைவர்கள், வொக்காலிகா மடாதிபதி, பிராமின் மடத்தின் தலைவர், மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று இருந்தனர். கட்சியில் செல்வாக்காக இருக்கும் சாதிய தலைவர்களை சார்ந்து இருப்பதை குறைத்துக்கொண்டு நேரடியாக மத தலைவர்கள் மற்றும் சாதிய தலைவர்களை பாஜகவின் மத்திய தலைமை அணுகுவதாக கர்நாடக பாஜகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அப்போது பாஜக தலைவராக இருந்த அமித்ஷா, கர்நாடகாவின் மடாதிபதிகளை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார். ஆனாலும் வொக்காலிக்கா சமுதாயத்தின் ஆதரவை அவரால் பெற முடியவில்லை.

அமித்ஷா, ஜேபி நட்டா,

அமித்ஷா, ஜேபி நட்டா,

இந்த நிலையில், சமீபத்தில் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கர்நாடகாவிற்கு வருகை தந்த போது லிங்காயத் உள்ளிட்ட பல்வேறு சமூக மடாதிபதிகளை சந்தித்தனர். உள்ளூர் பாஜக தலைவர்களின் ஆதரவு இன்றி நேரடியாக மத்திய தலைமையே மடாதிபதிகளுடன் தொடர்பு கொண்டு அந்த சமுதாய மக்களின் ஆதரவை பெறுவதில் பாஜக வியூகம் வகுப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதன் மூலம் கர்நாடகாவில் உள்ளூர் பாஜக தலைவர்களின் ஆதிக்கம் குறைந்து நேரடியாக மத்திய பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று கட்சியினர் கூறும் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+