என்ன சொல்கிறது பொருளாதார ஆய்வறிக்கை... புல்லட் பாய்ன்ட்ஸ்!
இந்தியப் பொருளாதார தலைமை ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன், இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துவிட்டு மீடியாவைச் சந்தித்தபோது இப்படிச் சொன்னார்:

"இந்த ஆய்வறிக்கை ரொம்ப நீளமானது. கேட்டு முடிக்க எக்கச்சக்க பொறுமை. உங்கள் தலை தொங்க ஆரம்பிக்குமுன் நிறுத்திவிடவே விரும்புகிறேன்.."
எனவே விலாவாரியாக கொடுக்க ஆரம்பித்தால் போரடிக்கும். எனவே பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள், புல்லட் பாயின்டுகளாக...
* பண ஒழிப்பு, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் நிலவும் இறுக்கமான சூழல் போன்றவை இந்திய வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
* இரண்டு பெரிய காரணிகள் நம் பொருளாதாரத்தை பாதித்துள்ளன. ஒன்று பண ஒழிப்பு... இன்னொன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.
* நாட்டின் தொழில் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாகக் குறையும்
* இந்தியாவின் மொத்த உற்பத்தி - வர்த்தக (Commodity and Services) விகிதம் சீனாவை மிஞ்சிவிட்டது
* பண ஒழிப்பால் குறுகிய காலத்தில் பெரிய அளவில் பலன் இல்லை. நீண்ட காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
* பண ஒழிப்பின் பாதிப்பு பிப்ரவரி மாதத்திலேயே நீங்கிவிடும் என்பது தவறு. ஏப்ரல் 2017-ல் ஓரளவு நீங்கும்.. டிசம்பரில்தான் சகஜமாகும்.
* பண ஒழிப்பு காரணமாக பெரிய நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களின் வாங்கும் திறனில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. தங்களின் நிகழ்கால கொள்முதல்களை அவர்கள் தள்ளிப் போட்டுள்ளனர்.
* நாட்டின் மொத்த உற்பத்தியில் 0.75 சதவீத பாதிப்பு ஏற்பட்டாலும், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் நம்முடையதுதான்.
* நாட்டின் 8 முக்கிய நகரங்களில் வீழ்ச்சியடைந்துள்ள ரியல் எஸ்டேட் தொழில் மேலும் வீழ்ச்சியடையும்.
* பெட்ரோலியப் பொருட்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மானியங்களைக் குறைத்துள்ளது அரசு. அது தொடர வேண்டும்.
* இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இந்த ஆண்டும் தொடர்கிறது. 2013-14-ல் 4.5 சதவீதமாக இருந்த இந்த பற்றாக்குறை, 2016-17-ல் 3.5 சதவீதமாக உள்ளது.
* உணவுப் பொருள்கள், தானியங்களின் விலைதான் உணவுப் பணவீக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது.
*2016 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்த விலைக குறியீட்டெண் பணவீக்கம் 2.9 சதவீதமாக உள்ளது.
* 2016- 17 சேவைத் துறை வளர்ச்சி 8.9 சதவீதமாக இருக்கும்.
* 2016-17 வேளாண்மைத் துறையில் 4.2 சதவீத வளர்ச்சி இருக்கும். கடந்த 2015-16-ல் இது வெறும் 1.2 சதவீதமாக இருந்தது.
* 2018-ல் வட்டி வீதம் குறைக்கப்பட்டால், அது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தருவதாக இருக்கும்.
* நிலங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும்.
* அந்நிய நேரடி முதலீட்டில் 29 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2016-17-ல் $ 21.3 பில்லியன் முதலீடு கிடைத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications