இன்று முதல் தங்கம், செல்போன் விலை உயரும் - விலை குறையும் பொருட்கள் என்னென்ன?
தங்கம், வெள்ளி, செல்போன் போன்றவற்றின் இறக்குமதிக்கான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளதால், ஏப்ரல் 1 முதல் இவற்றின் விலை கணிசமாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, செல்போன் போன்றவற்றின் இறக்குமதிக்கான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளதால், இன்றுமுதல் இவற்றின் விலை கணிசமாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியர்கள் தங்கத்தை ஒரு சிறந்த எதிர்கால முதலீடாக கருவதோடு மட்டும் அல்லாமல் ஆபரணமாக பயன்படுத்துவதாலும், புனிதமான பொருளாகவும் கருதுவதால் இந்தியாவில் தங்கத்தின் தேவையும் பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாகவே நாளுக்க நாள் தங்கத்தின் விலையும் ஏறிக்கொண்டே செல்கிறது.

தங்கம் விலை உயர்வு
கடந்த ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டபோது தங்கத்திற்கு 3 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 சதவிகிதம் சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. இருந்தாலும் கூட நாளுக்கு நாள் தங்கத்தின் விலையானது கூடிக்கொண்டே செல்கிறது.

இறக்குமதி தங்கம்
தங்கம் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த நினைத்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இறக்குமதி செய்யப்படும் தங்கதத்திற்கான சுங்க வரியை உயர்த்த முடிவு செய்தார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று, 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெட்லி, பட்ஜெட் உரையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கூடுதலாக 7 சதவிகிதம் வரை சுங்க வரி விகிதம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். சுங்க வரி விகிதம் உயர்த்தப்படுவதால் ஏப்ரல் 1ம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

செல்போன் விலை உயர்வு
தங்கத்தைப் போலவே இறக்குமதி செய்யப்படும் செல்ஃபோன்களுக்கும் கூடுதலாக 7 சதவிகிதம் வரை சுங்கவரி உயர்த்தப்படும். இதனால் செல்போன்களின் விலையும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயரக்கூடும்.
தங்கம், வெள்ளி, மற்றும் செல்போனைப் போலவே, மேலும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயரக்கூடும்

விலை குறையும் பொருட்கள்
அழகு சாதனப் பொருட்கள், பழச் சாறுகள்,காய்கறிகள்,குளிர் கண்ணாடிகள், சிகரெட், சிகெரெட் லைட்,
சேவிங் கிரீம், டூத் பேஸ்ட், பவுடர், சோப்புகள், வாசனைத் திரவியங்கள்,வைரக் கற்கள்,செயற்கை வைரக் கற்கள்,
எல்இடி, எல்சிடி மற்றும் உதிரிப்பாகங்கள்,சுவர் கடிகாரம், கை கடிகாரம், ஆடம்பர கை கடிகாரம் மற்றும் உதிரிப் பொருட்கள்,பட்டுத் துணிகள்,அறைகலன்கள், பல்புகள், மெத்தைகள்,மூன்று சக்கர சைக்கிள்கள்,விளையாட்டு சாதனங்கள்,எண்ணை மற்றும் எண்ணை வித்துக்கள் இதுவரையிலும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் ஏப்ரல் 1ம் இன்று முதல் கணிசமாக விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் பணம் அவசியம்
முந்திரிப் பருப்பு,சூரிய ஒளி ஏற்றப்பட்ட கண்ணாடிகள்,காது கேட்கும் கருவிகள் மற்றும் உதிரிப்பாகங்கள்,உயர்தர ஆடம்பரப் பொருட்கள்,பெரும்பான்மையான மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மேட்டுக்குடி மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஷாப்பிங் செல்பவர்கள் தங்கள் பர்சை கூடுதல் க(ப)ணத்தோடு கொண்டு செல்வது மரியாதையாக இருக்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications