முருங்கைக்கு வந்த சோதனை.... விலை வீழ்ச்சி.. சோகத்தில் விவசாயிகள்!
கரூர்: கரூர் அருகே முருங்கை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.
முருங்கை விளைச்சல் அமோகமாக இருப்பதே விலை வீ்ழ்ச்சிக்குக் காரணம்.
முருங்கைக் கட்டுக்குக்களை கண் முன்பு வைத்துக் கொண்டு விலை ஓய்ந்து போனதால் விவசாயிகள் கன்னததில் கை வைத்துக் கொண்டு சோகமாக உள்ளனர்.

அரவக்குறிச்சி, ஈசநத்தம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்காவிற்குட்பட்ட அரவக்குறிச்சி, ஈசநத்தம், ஆறு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை விவசாயம் அமோக விளைச்சலைக் கண்டுள்ளது.

விலை அடியோடு வீழ்ச்சி
இதன் காரணமாக தற்போது 3 மற்றும் 4 கிலோ கட்டு ரூ 5 மற்றும் 6 ரூபாய்க்கு விற்கிறது.

கிலோ 30 முதல் 40 வரை விற்றது
ஏற்கனவே 1 கிலோ ரூ 30 மற்றும் 40 விற்ற முருங்கை கட்டு தற்போது அமோக விளைச்சல் காரணமாக மிகவும் குறைந்த விலைக்கு இறங்கி விட்டது.

சோகத்தில் விவசாயிகள்
விலை குறைந்து விற்பதால், விவசாயிகள் பெரும் சோகத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசே விலை நிர்ணயிக்கக் கோரிக்கை
மேலும் தமிழக அரசு முருங்கைகாய்க்கென ஒரு விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட முருங்கை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி...
ஆனால் இந்த விலை குறைவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications