சம்பள உயர்வு கேட்டா.. வேலையை விட்டு துரத்தும் கம்பெனிகள்.. கதறும் ஊழியர்!
ஒரு பெரிய செமிகண்டக்டர் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனது ஊதிய உயர்வு குறித்து மேனேஜர் உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது எதிர்பாராத விதமாக நிர்வாகம் அவரை ராஜினாமா செய்ய சொல்லியுள்ளது. ரெட்டிட் தளத்தில் பகிரப்பட்ட பதிவில் இந்த ஊழியர் தனது அனுபவத்தை பகிர்ந்தை தொடர்ந்து கார்ப்ரேட் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி துறையில் தான் ஏஐ தொழில்நுட்பம் ஊழியர்களை பாடாய்படுத்துகிறது என்றால், மற்ற துறையிலும் வர்த்தக பாதிப்பு, லாபத்தில் சரிவு, ஏஐ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் செலவுகள் அதிகரிப்பு என கிட்டத்தட்ட ஐடி துறையில் இருக்கும் அதே நிலை உள்ளது.

ரெட்டிட் தளத்தில் பகிரப்பட்ட பதிவில், பல மாதங்களாக நிலுவையில் இருந்த ஊதிய உயர்வு குறித்து மேனேஜர் உடன் பேச அழைப்பு வந்தது. ஆனால் உரையாடலின் போது, "வேறு வாய்ப்புகளைத் தேடுங்கள்" என்று ராஜினாமா செய்யுமாறு மேனேஜர் கோரிக்கை வைத்தாக இந்த ஊழியர் தனது பதிவில் தெரிவித்தார்.
இவர் ஒரு பெரிய செமிகண்டக்டர் நிறுவனத்தில், அதன் தாய் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மேனேஜர் அந்த ஊழியரை ராஜினமா செய்ய கோரிக்கை வைக்க என்ன காரணம் என்பதையும் விளக்கியுள்ளார்.
ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் நிறுவனம் அவருக்கு தரும் ஊதியத்தை விட, தாய் நிறுவனம் அந்த பதவிக்கு கொடுக்கும் பணம் குறைவாகவே செலுத்தப்படுவதால், நிதி பிரச்சனை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேனேஜர் தெரிவித்துள்ளார். இதனால் தன்னை ராஜினாமா செய்யச் சொல்லியுள்ளதாக ஊழியர் பதிவிட்டார்.
இந்த நிலையில் இப்பணியில் இருந்து ராஜினாமா செய்ய விரும்பாத இவர், நிறுவனத்தை விட்டு ஊழியரை நிர்வாகம் வெளியேற்றப்பட்டால் severance pay கிடைக்கும். இதை பெறுவதற்கான வழி ஏதேனும் உள்ளதா என் ரெடிட் வாசகர்களிடம் உதவி கேட்டு இப்பதிவை செய்துள்ளார்.
குவிந்த உதவிகள்
இந்த பதிவுகக்கு ரெட்டிட் பயனர்கள் பலர் இந்தப் பதிவுக்கு உடனடியாக ஆலோசனை வழங்க துவங்கினர். பலர் "தானாக ராஜினாமா செய்ய வேண்டாம். அனைத்து விஷயங்களையும் மின்னஞ்சல் மூலம் கேளுங்கள்" என்று அறிவுறுத்தினர். ஒப்பந்த ஊழியர்கள் தானாக விலகினால் severance pay கிடைப்பது கடினம் என்பதால், நிறுவனமே வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ஒப்பந்தக் கடிதத்தை கவனமாகப் படிக்குமாறும், நிபந்தனைகளை முழுமையாக புரிந்துகொள்ளுமாறும் பயனர்கள் அறிவுறுத்தினர். ஒப்பந்த ஊழியர்களுக்கு பொதுவாக இன்சூரன்ஸ், severance pay மற்றும் பிஎஃப் போன்ற பலன்கள் குறைவாகவே கிடைக்கும் என்பதையும் பலர் சுட்டிக்காட்டினர்.
ஒப்பந்த ஊழியர்களின் சவால்கள்
இந்த சம்பவம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார்ப்ரேட் உலகில் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற தன்மையை அதிமாகவே உள்ளது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் விளங்குகிறது. செலவு குறைப்பு என்ற பெயரில் திடீர் முடிவுகள் எடுக்கப்படும் நிலையில், ஊழியர்கள் தங்கள் உரிமைகளை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது? -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications