டிசிஎஸ் ஊழியர்களுக்கு Work From Home.. நாசிக் அலுவலகம் முன் போராட்டம் - வீடியோ
டிசிஎஸ் விவகாரத்தை தொடர்ந்து இன்போசிஸ், டெக் மஹிந்திரா நிறுவனத்திலும் இதேபோன்ற புகார்கள் எழுந்த நிலையில் இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு, பணியிடம் ஒழுங்குமுறை மற்றும் புகார் அமைப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதில் பெரும் கேள்விகள் எழுந்துள்ளது.
இன்போசிஸ், டெக் மஹிந்திரா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்த நிறுவனங்கள் முழுமையாக மறுக்கப்பட்டாலும் இதுதொடர்பான பதற்றம் குறையவேயில்லை. இந்தியாவில் டாப் 5 நிறுவனத்தில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பணியாற்று வருகின்றனர், இதில் பெரும் பகுதியினர் பெண்கள், குறிப்பாக கல்லூரி படிப்பை முத்து பெரும் கனவுகளுடன் வரும் பெண்கள்.

இந்த நிலையில் டிசிஎஸ் தனது நாசிக் கிளை பணியாளர்களுக்கு தற்காலிகமாக வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. பாலியல் தொல்லை குறித்த விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் உள்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Moneycontrol's @debanganaghosh4 reports from Nashik. Protests underway by women outside the TCS office, heavy police presence. All employees asked to work from home https://t.co/VQ9FGVPPVN pic.twitter.com/ziUjXUT1Fk
— Chandra R. Srikanth (@chandrarsrikant) April 16, 2026
டிசிஎஸ் இத்தகைய முடிவை எடுக்க முக்கிய காரணம் அலுவலகத்தை சில உள்ளூர் அமைப்புகள் சேதப்படுத்த முயன்ற சம்பவம், இந்த அலுவலத்தில் பணியாற்றுவோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பதற்காக வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் டிசிஎஸ் அலுவலகம் முன்பும், நாசிக் சாலைகளிலும் உள்ளூர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நாசிக்கில் உள்ள அசோகா பிசினஸ் என்க்ளேவ் வளாகத்தில் செயல்படும் டிசிஎஸ் BPO அலுவலகம் சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 170 பணியாளர்கள் இரண்டு வேளைகளில் பணியாற்றி வந்தனர். அலுவலகத்தை சேதப்படுத்தும் முயற்சிக்கு பன்பு தற்போது, அலுவலக நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மார்ச் மாதத்தில் ஒரு பெண் பணியாளர், திருமணம் செய்வதாக கூறி உடலுறவு வைத்ததாக தனது சக ஊழியருக்கு எதிராக புகார் அளித்தார். இதன் பின்னர் விசாரணை விரிவடைந்து, சுமார் 8 FIR-கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் தற்போது அசிஃப் அன்சாரி, ஷாஃபி ஷேக், ஷாருக் குரேஷி, ரஸா மேமன், தௌசிப் அட்டார், டேனிஷ் ஷேக் மற்றும் அஷ்வினி சைனானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 15 அன்று சைனானி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். நாசிக் டிசிஎஸ் சம்பவம், இந்திய ஐடி துறைக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications