"இனி தினசரி அதிகபட்சம் 50 முறை தான்.." யுபிஐ விதிகளில் வரும் அதிரடி மாற்றம்! நோட் பண்ணுங்க
மும்பை: நமது நாட்டில் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக யுபிஐ பல மடங்கு அதிகரித்து விட்டது. இதற்கிடையே யுபிஐ சேவை திடீரென முடங்குவதைத் தடுக்கும் வகையில் என்பிசிஐ புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இவை நிலையான யுபிஐ சேவை இருப்பதை உறுதி செய்யும் என என்பிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் யுபிஐ வந்த பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. யுபிஐ மூலம் பணம் அனுப்பும் போது இரு தரப்பும் எந்தவொரு கமிஷனையும் செலுத்தத் தேவையில்லை. இதனால் மக்கள் பலரும் இந்த யுபிஐ சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். வெகு சில காலத்திலேயே யுபிஐ சேவை பல மடங்கு அதிகரித்திருந்தது.

யுபிஐ சேவை
இருப்பினும், சமீப காலமாக யுபிஐ சேவை அவ்வப்போது முடங்கி வருகிறது. மக்கள் இப்போது பெரும்பாலும் யுபிஐ சேவைகளையே நம்பி இருக்கும் சூழலில், திடீரென இதுபோல முடங்குவது பெரிய சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கிடையே யுபிஐ பேமேண்ட்களை கண்காணிக்கும் என்பிசிஐ இது தொடர்பாக சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இந்த புதிய விதிகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சம் 50 முறை தான்
ஒவ்வொரு யுபிஐ யூசரும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே தங்கள் வங்கியின் பேலன்ஸை செக் செய்ய முடியும். இப்போது ஒருவர் தனது வங்கியின் பேலன்ஸை செக் செய்ய அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. ஒருவர் எத்தனை முறை வேண்டும் என்றாலும் செக் செய்து கொள்ளலாம். ஆனால், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இதற்கு அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் ஒருவர் இரண்டு செயலிகளைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு செயலியிலும் தலா 50 முறை வங்கி பேலன்ஸ் செக் செய்யலாம். ஆக மொத்தம் 100 முறை வங்கி பேலன்ஸ் செக் செய்ய முடியும்.
மேலும், ஒரு பரிவர்த்தனை வெற்றிகரமாக இருந்ததா என்பதையும் பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் சரிபார்க்க அனுமதிக்கின்றன. புதிய வழிகாட்டுதல்களின் கீழ், குறிப்பிட்ட நேரம் காலதாமதமானால் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களே பரிவர்த்தனை நிலையை செக் செய்ய அனுமதிக்கப்படும்.
தினசரி 25 முறை
யூசர் ஒருவர் தங்கள் மொபைல் நம்பருடன் எந்த வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே செக் செய்ய முடியும். அதுவும் கூட யூசர்கள் தங்கள் வங்கியைத் தேர்வு செய்து கோரிக்கை விடுத்தால் மட்டுமே இதை செக் செய்ய முடியும். இந்த சேவைக்கும் அதிகபட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படாத நிலையில், இப்போது அது அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிக்க அறிவுறுத்தல்
பேடிஎம், போன்பே உள்ளிட்ட பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் தங்கள் செயலிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலிகளில் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதங்கள், கட்டுப்பாடுகள் அல்லது புதிய பயனர்களைச் சேர்க்கத் தடை கூட விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களும் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிகள் விரிவான தணிக்கை நடத்தி அதன் விவரங்களைச் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீப காலங்களாக யுபிஐ சேவை திடீர் திடீரென முடங்கி வரும் நிலையில், இந்த கட்டுப்பாடுகள் அவை சீராக இயங்குவதை உறுதி செய்யும் என்றும் என்பிசிஐ தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications