"தங்கம்.." அடுத்தாண்டு விலை ஏறுமா? குறையுமா? நாலே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்! நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டு முடிய இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்தாண்டு அதிக லாபத்தை நமக்கு அள்ளி கொடுத்தது என்றால் அது தங்கம் தான். இதற்கிடையே அடுத்தாண்டு சந்தை எப்படி இருக்கும்.. எது அதிகம் உயர வாய்ப்பு இருக்கிறது.. அதற்கு என்ன காரணங்களை என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தாண்டு தொடக்கம் முதல் மட்டும் தங்கம் விலை 25%க்கு மேல் அதிகரித்து இருக்கிறது.

anand srinivasan personal finance


தங்கம் விலை:

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்குச் சற்று விலை குறைந்த தங்கம் விலை, அதன் பிறகு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹7,150ஆக இருக்கிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ரூ.7800ஆக இருக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கம் ரூ.65 வரை உயர்ந்துள்ளது.

இந்தாண்டு இப்படி தங்கம் விலை உச்சத்திற்குப் போய் இருக்கும் நிலையில், அடுத்தாண்டு தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். தங்கம் விலை எதனால் உயரும்.. எந்தளவுக்கு உயரும் என்பது குறித்த தகவல்களை அவர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்:

இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் இந்தாண்டு மட்டும் 27% அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு பல ஆண்டுகள் நிஃப்டியை காட்டிலும் தங்கம் அதிக லாபம் கொடுத்து இருந்தது. ஆனால், இந்த முறை நிஃப்டி மட்டுமில்லை.. எஸ் & பி 500ஐ (அமெரிக்காவின் டாப் 500 நிறுவனங்களின் மதிப்பு குறியீடு) விடக் கூட காலி செய்துள்ளது. அமெரிக்கப் பங்குச்சந்தையை விடத் தங்கம் அதிக லாபம் கொடுத்திருக்கிறது.

பொதுவாகப் பங்குச்சந்தை என்றால் அது விலை ஏற்றம் இறக்கத்தைப் பார்த்தாலே நமக்கு டென்ஷனாக இருக்கும். ஆனால், தங்கத்தைப் பொறுத்தவரை ஏற்றமும் சரி இறக்கமும் சரி நமக்குத் தெரியாது. 2010க்கு பிறகு இதுதான் தங்கத்திற்கு மிகச் சிறந்த ஆண்டு. மத்திய அரசு ஒரு முறை இறக்குமதி வரியைக் குறைத்ததால் தான் இந்த ரேஞ்சில் இருக்கிறது. இல்லையென்றால் 22 கேரட் தங்கம் எளிதாக ரூ.8000ஐ தாண்டி இருக்கும்.

சர்வதேச மோதல்கள்:

இஸ்ரேல்- ஈரான் போர், உக்ரைன் மோதல், சிரியா ஆட்சி கவிழ்ப்பு ஆகியவை இதற்குக் காரணமாகச் சொல்வார்கள். ஆனால், உண்மையில் ரஷ்யா, சீனா ஒரு பக்கம் இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் அமெரிக்கா நிற்கிறது. இப்படி இரு பிரிவுகளாக உலகம் இருப்பதாலேயே அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அதிகரிக்கும் போது கூட தங்கம் விலையும் உயர்ந்தது.

இப்போது அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை எகிறிவிடும். அடுத்தாண்டு அவர்கள் வட்டி விகிதத்தைப் பெரியளவில் குறைக்க மாட்டார்கள். ஆனால், அதற்கு அடுத்தாண்டு வட்டியைக் குறைக்கும் போது தங்கம் விலை எங்கோ பறந்து போய்விடும். ஏற்கனவே கடந்த அக். மாதம் அமெரிக்காவில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தங்கம் இறக்குமதியும் அதிகரித்துள்ளது.

என்ன நடக்கும்:

இது ஒரு பக்கம் இருக்க ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்தே வருகிறது. ரூபாயின் மதிப்பு சரியும் போது தங்கம் சூப்பராக இருக்கும். எனவே, அடுத்த 24 மாதத்திற்குத் தங்கத்தை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. அடுத்தாண்டு தங்கம் விலை உச்சம் தொடும். ஆனால், அதற்கு அடுத்தாண்டு அதையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்குத் தங்கம் உயரும். எனவே, தங்கம் வாங்கி வைத்தவர்கள் அச்சப்படத் தேவையில்லை. நான் சொல்வது போல 400 கிராம் தங்கத்தை வாங்கி வைத்திருந்தால் உங்களுக்கு ஹேப்பி தான். எந்தவொரு ஏற்ற இறக்கமும் இல்லாமல் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+