TCS நாசிக் விவகாரம்: யார் இந்த நிதா கான்? ஹெச்ஆர் மேனேஜர் தான் மாஸ்டர்மைன்ட்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் 150 பேர் கொண்ட BPO அலுவலகத்தில் எழுந்துள்ள பாலியல் தொல்லை மற்றும் மத மாற்ற குற்றச்சாட்டு வழக்கில் இந்த அலுவலகத்தின் ஹெச்ஆர் மேனேஜர் நிதா கான் முக்கிய குற்றவாளியாக போலீஸ் விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பல பெண் பணியாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு விரிவடைந்து, தற்போது தேசிய அளவில் ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கு்ம விஷயமாக மாறியதுள்ளது. இது தொடர்பாக சுமார் 8 வழக்குகள், 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த வழக்குகளை விசாரிக்க SIT அமைக்கப்பட்டு உள்ளது.

யார் இந்த நிதா கான்?
டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் பிபிஓ அலுவலகத்தின் ஹெச்ஆர் பிரிவின் AGM பதவியில் பணியாற்றியவர் தான் நிதா கான். பணியாளர்களின் புகார்களை கையாளுதல் மற்றும் POSH விதிமுறைகளை அமல்படுத்துதல் இவரது முக்கிய பொறுப்பாக இருந்தது.
ஆனால், பெண் பணியாளர் மின்னஞ்சல் மூலம் அளித்த பாலியல் தொல்லை புகாரை அவர் கவனிக்காமல் விட்டதாகவும், மேலதிகாரிகளிடம் எடுத்துச் செல்லாததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், அவர் இந்த சம்பவத்தில் 'மாஸ்டர்மைண்ட்' மற்றும் 'எனேப்ளர்' என போலீசார் சந்தேகிக்கப்படுவதாக ஃப்ரி பிரஸ் ஜர்னல் தனது செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.
மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரை, Deolali மற்றும் Mumbai Naka காவல் நிலையங்களில் மொத்தம் 8 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியான தொடுதல், பாலியல் ரீதியான பேச்சுகள், பணி சுமையை அதிகரித்து அழுத்தம் கொடுத்தல், மத மாற்றத்தை கட்டாயப்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கும்.
இந்த வழக்கின் விசாரணையில், சில மேனேஜர்கள் பெண்களை குறிப்பிட்ட மத நடைமுறைகளை பின்பற்ற அழுத்தம் கொடுத்ததாகவும், grooming போன்ற செயல்பாடுகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், நிதா கான் பெண்களுடன் நெருக்கமாக பழகி, பின்னர் மத சம்பந்தமான பழக்கங்களை அறிமுகப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிதா கான் முதலில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார் என போலீசார் விளக்கம் கொடுத்துள்ளனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் இந்த வழக்கை மேலும் விரிவுபடுத்தி விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறுகையில், நாசிக் அலுவலகத்தில் பணியாற்றிய மூத்த மேலாளர், பாதிக்கப்பட்ட பெண்களை நமாஸ் செய்ய வற்புறுத்தியதாகவும், மாட்டிறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தி, அவர்களை மத மாற்றம் செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications