"ஐ லைக் யூ".. அடுத்தவர் மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய இளைஞர்.. கோபத்தில் கணவர் எடுத்த ஆக்சன்!
சண்டிகர்: சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில சில சர்ச்சைகள் பெரும் பேசுபொருளாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் தான் ஒரு பெண்ணை பார்த்து ஐ லைக் யூ என சொல்லியதற்காக அவரது கணவரால் தாக்கப்பட்டதாக போலீசிடம் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
உதவி கேட்டு போலீசை நாடிய அந்த நபருக்கு காவல்துறை கூறிய அட்வைஸ் போஸ்ட்தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பஞ்சாப் மாநில காவல்துறை சமீபத்தில் ஒரு டிவிட்டை பதிவிட்டிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.

காவல்துறை
சரி காவல்துறை அப்படி என்னதான் அந்த டிவிட்டில் சொல்லியிருந்தது என கேட்கிறீர்களா? அதாவது ஒரு டிவிட்டர் பயனாளி அம்மாநில காவல்துறையை டேக் செய்து ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், "நான் ஒரு பெண்ணை பார்த்து ஐ லைக் யூ என சொல்லியிருந்தேன். இதனால் நான் கடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன். அப்பெண்ணின் கணவர்தான் என்னை கடுமையாக தாக்கியுள்ளார். எனவே அவரிடமிருந்து எனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்.

திருமணமான பெண்
நான் தொடர்ந்து அச்சத்தில் உள்ளேன்." என்று கூறியுள்ளார். இதற்கு காவல்துறை தரப்பில் "திருமணமான ஒரு பெண்ணுக்கு முகம் சுளிக்கும் வகையில் நீங்கள் மெசேஸ் அனுப்பியதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை. ஆனால் அப்பெண்ணின் கணவர் உங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கக்கூடாது." என பதிவிட்டுள்ளனர். சரி இத்துடன் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக நீங்கள் கருதியிருக்கலாம்.

காவல்துறை
ஆனால் இதன் பின்னர்தான் காவல்துறையின் உண்மை முகம் வெளிவந்துள்ளது. காவல்துறை தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, "சம்பந்தப்பட்டவர்கள் எங்களிடம் உங்களை பற்றி புகார் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு அளித்திருப்பின் சரியான சட்ட விதிகளின் கீழ் நாங்கள் நடவடிக்கை எடுத்திருப்போம். தற்போது இந்த இரண்டு சம்பவங்களும் உரிய முறையில் விசாரிக்கப்படும்" என்று கூறியுள்ளது.

அடுத்தவர் மனைவி
அடுத்தவரின் மனைவி குறித்து முகம் சுளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த நபருக்கு காவல்துறை அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதேபோல இந்த சம்பவம் குறித்து தாக்குதலுக்கு உள்ளான நபர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.இந்த டிவிட்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இதுதான் பெஸ்ட் போலீஸ் என்று கூறி பலர் ரீட்வீட் செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications