ஹரியானாவில் “யூ-டர்ன்” அடித்த பாஜக.. கடைசி நிமிடத்தில் வேட்பாளர் திடீர் வாபஸ்.. பின்னணி என்ன?
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபைக்கு வரும் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களம் இறங்கி உள்ளனர். இந்நிலையில், ஹரியானா தேர்தல் களத்தில் இருந்து பாஜக வேட்பாளர் திடீரென பின்வாங்கி உள்ளார். சிர்சா தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய ரோஹ்தாஷ் ஜாங்ரா வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்து, இன்று வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாக இருந்தது.

ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதுவும் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. இந்த சூழலில் ஹரியானாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. ஹரியானா மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
பாஜகவிற்கு எதிரான விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டம் ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. சமீபத்தில் கூட மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர். வினேஷ் போகத்துக்கு சீட்டும் கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில் சிர்சா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரோஹ்தாஷ் ஜாங்ரா போட்டியில் இருந்து பின்வாங்கி உள்ளார். அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். சிர்சா தொகுதியில் ஹரியானா லோக்ஹித் கட்சியின் தலைவர் கோபால் கண்டாவுக்கு பாஜக தலைமை ஆதரவு தெரிவித்துள்ளதால், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்த ரோஹ்தாஷ் ஜாங்ரா வாபஸ் பெற்றுள்ளார்.
இது குறித்து ரோஹ்தாஷ் ஜாங்ரா கூறுகையில், "நான் எனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிட்டேன். ஹரியானா மாநிலம் மற்றும் நாட்டின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். காங்கிரஸ் அல்லாத ஹரியானா என்பதே எங்கள் இலக்கு" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் சிர்சா தொகுதியில் வென்ற கோபால் கண்டா பின்னர் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்தார். இதையடுத்து இந்த முறை, தாங்கள் போட்டியிடாமல் கோபால் கண்டாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது பாஜக. இம்முறையும் அங்கே கோபால் கண்டா போட்டியிடுவதால் வெற்றி பெற்றால் பா.ஜ.கவை ஆதரிப்பார் என்று கூறப்படுகிறது. சிர்சா தொகுதியை தவிர்த்து மற்ற 89 தொகுதிகளில் பாஜக தனித்தே களம் காண்கிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications