மறைந்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்.. மூத்த அரசியல் தலைவரை இழந்தது நாடு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 95 வயதான பாதல் மூத்திணறல காரணமாக மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
பஞ்சாப் மாநில கட்சியான சிரோமனி அகாலி தளத்தின் மூத்த தலைவராகவும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். 95 வயதான இவருக்கு கடந்த ஒரு வார காலமாக மூச்சு விடுவதில் சிரமம் நிலவி வந்தது. இதன் காரணமாக அவர் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரகாஷ் சிங் பாதலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திங்கள் கிழமை பிரகாஷ் சிங் பாதலின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், "பிரகாஷ் சிங் பாதல் ஐசியுவில் வைக்கப்பட்டு உள்ளார். அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்." என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
அதே நேரம் அவரது உடல் நிலை நன்றாக முன்னேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தனர். குடும்பத்தினர் தரப்பிலும் அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. பிரகாஷ் சிங் பாதல் உடல் சிகிச்சை ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், கடந்த சில நாட்களாக நிலையான முன்னேற்றம் உடல் நிலையில் ஏற்பட்டு உள்ளதாதாகவும் கூறப்பட்டது.

விரைவில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வேறு வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இன்று இரவு 8:28 மணியளவில் பிரகாஷ் சிங் பாதலின் இதயத் துடிப்பு நின்றதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்கள். பிரகாஷ் சிங் பாதல் மறைந்த செய்தியை அவரது மகன் சுக்பீர் சிங் பாதலின் உதவியாளர் உறுதிபடுத்தி இருக்கிறார்.
பிரகாஷ் சிங் பாதலுக்கு ஏற்கனவே இரைப்பை அழற்சி மற்றும் மூச்சுக்குழாய் ஆஸ்துமா பிரச்சனைகள் ஏற்கனவே இருந்து உள்ளன. இதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. 5 முறை பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பிரகாஷ் சிங் பாதலின் மறைவு செய்தி அம்மாநில மக்கள் மற்றும் அகாலி தளம் கட்சியினரை சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications