காங்கிரஸுக்கு ‘குட்பை’ சொன்ன தலைவர்.. அதுவும் கட்சியை பலப்படுத்த மாநாடு நடக்கும்போதே - அட கொடுமையே!
சண்டிகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பியுமான சுனில் ஜாக்கர் விலகினார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை கடுமையாக விமர்சித்ததால் சுனில் குமார் ஜாக்கரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக விலகினார் சுனில் ஜாக்கர். காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர்கள் மாநாடு உதய்பூரில் நடந்து வரும் நிலையில், மூத்த தலைவர் கட்சியிலிருந்து விலகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுனில் ஜாக்கர்
பஞ்சாப் மாநிலத்தில் 2017 முதல் 2021 வரை காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுனில் ஜாக்கர். அம்மாநில எம்.எல்.ஏவாகவும், மக்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். நவஜோத் சித்துவை காங்கிரஸில் தலைவராக்குவதற்காக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சுனில் ஜாக்கர் விலக்கப்பட்டார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அம்மாநில காங்கிரஸில் குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

முன்னாள் முதல்வர் மீது விமர்சனம்
சுனில் ஜாக்கர், பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை கடுமையாக விமர்சித்து வந்தார். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அவரே பொறுப்பு எனக் கூறி அவரை முதல்வராக்கிய காங்கிரஸ் தலைமையையும் விமர்சித்திருந்தார்.
இதன் காரணமாக காங்கிரஸ் தலைமை அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். நோட்டீஸ் வழங்கப்பட்ட சில நாட்களில், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஃபேஸ்புக் லைவில் தனது விலகலை அறிவித்துள்ளார் சுனில் ஜாக்கர்.

தலைமை மீது குற்றச்சாட்டு
ஃபேஸ்புக் லைவில் பேசிய சுனில் ஜாக்கர், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் டெல்லியில் அமர்ந்துகொண்டு பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியை அழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த சுனில் ஜாக்கர், 'காங்கிரஸுக்கு குட்பை மற்றும் குட்லக்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தியை நல்ல மனிதர் என பாராட்டிய சுனில் ஜாக்கர், அவர் மீண்டும் தலைவர் பொறுப்புக்கு வர வேண்டும் என்றும் துதிபாடிகளிடம் இருந்து அவர் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி
கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தவும், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதற்கு முன்பாக நடைபெற உள்ள பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்கவும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுனில் ஜாக்கரின் திடீர் விலகல் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பஞ்சாப்பில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது.

பாஜகவில் இணைவாரா?
தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் இருந்து கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் சுனில் நீக்கியுள்ளார். தனது ட்விட்டர் கணக்கின் பின்னணி படத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக் கொடியை நீக்கிவிட்டு தேசியக் கொடியை வைத்துள்ளார்.
விலகல் அறிவிப்பை வெளியிட்ட சுனில் ஜாக்கர், ஃபேஸ்புக் லைவுக்கு 'மன் கி பாத்' என தலைப்பு வைத்திருந்தார். 'மன் கி பாத்' மோடி வானொலியில் நிகழ்த்தும் உரை என்பதால், அவர் பாஜகவில் இணையவிருப்பதாக யூகங்கள் கிளம்பியுள்ளன.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications