எப்படி இருந்தவங்க தெரியுமா? ஒரு காலத்தில் ’கிங் மேக்கர்’.. ஹரியானாவில் செம்மயாக அடிவாங்கிய ஜேஜேபி!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் ஆரம்பத்தில் கடும் போட்டியளித்த நிலையில், இறுதியில் பின்னடவை சந்தித்தது. இந்நிலையில் ஹரியானாவில் ஒரு காலத்தில் கிங்மேக்கர் ஆக மாநிலத்தில் அறியப்பட்ட ஜனநாயக ஜனதா கட்சி ( ஜேஜேபி) பரிதாபமான நிலையில் இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றிருக்கும் நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பத்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற முனைப்பு காட்டியது.

haryana assembly election results 2024 haryana assembly election 2024 jjp 2024

அதே நேரத்தில் பாஜகவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் களம் இறங்கி இருக்கிறது. ஹரியானாவை பொருத்தவரை மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகளும், சில மாநில கட்சிகளும் களம் கண்டன. பாஜக தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா சில பொது கூட்டங்களில் மட்டும் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹேமமாலினி , அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி என பலரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று நிறைவடைந்திருக்கும் நிலையில் பாஜக காங்கிரஸ் கட்சிகள் கடும் போட்டியளித்தன. இறுதியில் பாஜக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. அதே நேரத்தில் மாநில கட்சிகள் தோல்வி முகத்தை நோக்கியே பயணித்துள்ளன. கடந்த 2019 தேர்தலில் பாஜக நாற்பது தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் 30 இடங்களில் வென்றது. அப்போது ஹரியானாவின் மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி ( ஜேஜேபி ) 10 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை உறுதி செய்யும் இடத்தில் இருந்தது.

அப்போது பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் ஜேசிபி கட்சியோடு கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சர் ஆக ஜேசிபி கட்சி தலைவர் சவுதலாவும் நியமிக்கப்பட்டார். நான்காண்டுகள் ஆட்சி நடந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

10 மக்களவைத் தொகுதிகளில் பாஜக, ஜேசிபி கட்சிக்கு ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முன் வந்தது. ஆனால் இரு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கையோடு அக்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. தொடர்ந்து பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்ட போது சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சி தக்க வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் ஆம் ஆத்மி தனியாக களமிறங்கியது. பாஜகவும் தனித்துப் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் இந்தியா கூட்டணி உடனும், ஜனநாயக ஜனதா கட்சி ஆசாத் சமாஜ் கட்சி உடனும், இந்திய தேசிய லோக் தளமும் பகுஜன் சமாஜ் கட்சி உடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

இதில் கிட்டத்தட்ட 86 தொகுதிகளில் காங்கிரஸ் பாஜக கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது. கடந்த ஆட்சியில் கிங் மேக்கராக இருந்த ஜேசிபி தற்போது ஒன்று இரண்டு எம்எல்ஏக்களை கைப்பற்றவே கடுமையாக போராடி வருகிறது. மேலும் இந்த தேர்தலில் களம் கண்ட ஆம் ஆத்மி எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக ஜனநாயக் ஜனதா கட்சியின் (ஜேஜேபி) தலைவரும், ஹரியானா முன்னாள் துணை முதல்வருமான துஷ்யந்த் சிங் சவுதாலா, தற்போது பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளார். சௌதாலா தற்போது உச்சன கலன் தொகுதியில் பின்தங்கி, ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+