சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடமே தர கூடாது.. 17 பேரை மொத்தமாக வளைக்க திட்டமிடும் காங்.. ஹரியானாவில் களமிறங்கும் சோனியா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Haryana assembly elections result: Congress called their candidates

    சண்டிகர்: ஹரியானாவில் ஆட்சி பிடிப்பதற்காக 17 எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சி வளைக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

    ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆச்சர்யமாக ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும்.

    அங்கு தொங்குசட்டசபை உருவாகி உள்ளது. ஜனநாயக் ஜனதா கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆகியோர் தற்போது ஹரியானாவில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.

    மகாராஷ்டிராவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அஜித் பவார்! சூப்பர் சாதனைமகாராஷ்டிராவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அஜித் பவார்! சூப்பர் சாதனை

    ஹரியானா எப்படி

    ஹரியானா எப்படி

    இந்த நிலையில் ஹரியானாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் பெரிய திட்டங்களை வகுத்து இருக்கிறது. அதன்படி முதலில் ஜனநாயக் ஜனதா பார்ட்டியின் ஆதரவை பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவிற்கு முதல்வர் பொறுப்பை வழங்கவும் காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று நேற்றே தகவல்கள் வந்தது.

    பாஜக வழி

    பாஜக வழி

    ஜேஜேபி கட்சியிடம் 10 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் 7 சுயேட்சைகள் இருக்கிறார்கள். பாஜக நினைத்தால் இந்த 7 பேரில் 6 பேரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க முடியும். ஜேஜேபி ஆதரவு இல்லாமலே பாஜக நினைத்தால் ஆட்சி அமைக்க முடியும்.

    எல்லோரும் வேண்டும்

    எல்லோரும் வேண்டும்

    அதனால் தற்போது காங்கிரஸ் கட்சி அந்த 7 சுயேச்சை எம்எல்ஏக்களையும் வளைக்க திட்டமிட்டுள்ளது. பாஜகவிற்கு இடமே தர கூடாது. மொத்தம் ஜேஜேபி எம்எல்ஏக்கள் 10 பேர், சுயேச்சை எம்எல்ஏக்கள் 7 பேர் என்று 17 பேரை வளைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.

    சோனியா காந்தி

    சோனியா காந்தி

    இதற்காக சோனியா காந்தியே நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளது. அவரே ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகிறார்கள். இதனால் டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைகள் எல்லாம் ஹரியானாவிற்கு செல்ல இருக்கிறார்கள், என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Haryana assembly elections result: Congress plans to woo both JJP and Independents to form the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X