‛‛மைனாரிட்டி அரசு’’.. ஹரியானாவில் கலையப்போகிறதா பாஜக ஆட்சி? மெஜாரிட்டி பெறுவதில் சிக்கல்
சண்டிகர்: ஹரியானாவில் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் வாபஸ் வாங்கி உள்ளனர். இதனால் பாஜக ‛‛மைனாரிட்டி அரசாக'' உள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பிறகு அங்கு பாஜக அரசு கவிழ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்தார். தற்போத நவாப் சிங் சைனி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் மொத்தம் 10 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடந்தது.

இந்நிலையில் தான் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகு ஹரியானாவில் பாஜக அரசு கவிழலாம் என கூறப்படுகிறது. ஏனெ்னறால் தற்போது அங்கு நடக்கும் பாஜக அரசுக்கு சட்டசபையில் பெரும்பான்மை என்பது இல்லாத நிலை உள்ளது.
அதாவது ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
பாஜக 41 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 30 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், எச்எல்பி மற்றும் ஐஎன்எல்டி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து சுயேச்சை எம்எல்ஏக்கள் உதவியுடன் பாஜக அரியணை ஏறியது. மனோகர் லால் கட்டார் முதல்வராக செயல்பட்டு வந்தார். கடந்த மார்ச் மாதம் மனோகர் லால் கட்டார் மாற்றப்பட்டார். புதிய முதல்வராக நவாப் சிங் சைனி பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தான் ஆளும் பாஜக அரசு மைனாரிட்டியாக மாறி உள்ளது. அதாவது தற்போது பாஜகவின் மனோகர் லால் கட்டார், ரஞ்சித் சவுத்ரி ஆகியோர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். அதேபோல் சுயேச்சை எம்எல்ஏ ராகேஷ் காலமானார். இதனால் அங்கு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 87 ஆக உள்ளது.
இதனால் மாநிலத்தில் ஆட்சியில் நீடிக்க பாஜகவுக்கு 44 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் பாஜகவுக்கு சொந்த கட்சியின் எம்எல்ஏக்கள், ஹரியானா லோகித் கட்சியின் எம்எல்ஏ கோபால் காண்டா மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 40 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக அரசு கவிழலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் பாஜக அரசு கவிழ்ந்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா என்றால் அதற்கும் முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் அதிகாரத்தை பிடிக்க 44 எம்எல்ஏக்கள் வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்எல்ஏக்களும்,
சுயேச்சை எம்எல்ஏக்களான சோம்பீர் சங்வான், ரந்தீர் கொல்லன், தர்ரம்பால் கொண்டார் ஆகியோர் என மொத்தம் 33 பேர் மட்டுமே உள்ளனர்.
இதுதவிர ஜனநாயக ஜனதா கட்சி 10 எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்கள் பாஜக மற்றும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்காமல் உள்ளனர். இவர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் காங்கிரஸால் புதிதாக ஆட்சியை அமைக்க முடியும். ஒருவேளை பாஜகவுக்கு இவர்கள் ஆதரவு தெரிவித்தால் ஆட்சி கவிழாமல் காப்பாற்ற முடியும். இருப்பினும் கூட இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஹரியானாவுக்கு வரும் நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சில மாதங்களுக்காக மட்டும் ஆட்சியை காப்பாற்ற மற்றவர்களின் ஆதரவை பெற காங்கிரஸ், பாஜக மேலிடம் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் ஹரியானாவில் பாஜக ஆட்சி கவிழலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications