ஹரியானா மதவன்முறை: பஜ்ரங் தள் நிர்வாகி பிட்டு பஜ்ரங்கியை துரத்திப் பிடித்து கொத்தாக தூக்கிய போலீஸ்!
சண்டிகர்: ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் மதவன்முறைகளை தூண்டிவிட்டதாக இந்துத்துவா தீவிரவாத அமைப்பான பஜ்ரங்தள் நிர்வாகி பிட்டு பஜ்ரங்கியை போலீசார் ஓட ஓட விரட்டி கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அண்மையில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் இஸ்லாமியர்களை எரித்து கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்படுகிற மோனு மானேசர் என்ற இந்துத்துவா தீவிரவாதி பங்கேற்பதாகவும் தகவல்கள் பரவியது. இதனையடுது இப்பேரணியை இன்னொரு தரப்பினர் தடுக்க வன்முறைகள் வெடித்தன.

ஹரியானா மாநிலம் நூ மாவட்ட வன்முறையில் மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். 20 போலீசார் படுகாயம் அடைந்தனர். மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் வெடித்த கலவரம் டெல்லியை நோக்கி நகர்ந்தது. இதனால் வட இந்தியாவில் பெரும் பதற்றம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து நூ மாவட்டத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களை ஹரியானா மாநில அரசு நிர்வாகம் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அத்துடன் நூ பேரணியின் போது பதிவு செய்யபட்ட வீடியோ காட்சிகள், சிசிடிவி காட்சிகள் வைத்தும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பஜ்ரங் தள் நிர்வாகி பிட்டு பஜ்ரங்கி, வன்முறையை தூண்டும் முழக்கங்களை எழுப்பியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பிட்டு பிஜ்ரங்கியை போலீசார் கைது செய்ய சென்ற போது அவர் தப்பி ஓடினார். ஆனால் போலீசார் துரத்திச் சென்று கழுத்தில் கையை வைத்து கொத்தாக தூக்கி வந்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications