ஹரியானாவில் மண்ணைக் கவ்விய காங்கிரஸ்: பாஜக வெற்றி பெற்றது எப்படி? டாப் 5 காரணங்கள்
சண்டிகர்: ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து இருக்கும் பாஜக, அங்கு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஹரியானாவில் ஷாக் முடிவு கிடைத்துள்ளது. ஹரியானவில் பாஜக வாக்கு வங்கியை தக்க வைத்து வெற்றியை எப்படி பெற்றது என்பதற்கான டாப் 5 காரணங்காளை பார்க்கலாம்.
ஹரியானாவில் கடந்த 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஹரியானாவில் பாஜக இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை அங்கு அதிகம் இருப்பதாகவும் இதனால் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறின.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் சுமார் 60 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது. இதனால், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களை கட்டின. ஜிலேபி கொடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு இருந்த தருணத்தில் நிலைமை அப்படியே தலை கீழாக மாறியது. காங்கிரஸ் முன்னிலை வகித்த பெரும்பாலான தொகுதிகளில் நிலைமை அப்படியே மாறியது.
5 காரணங்கள்: பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் மேலாக பாஜக முன்னிலை பெறத்தொடங்கியது. ஹரியானவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். பாஜக தற்போதைய நிலவரப்படி 50 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பாஜக மூன்றாவது முறையாக ஹரியானாவில் ஆட்சி அமைக்க உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கி பாஜக, ஹரியானாவில் அபார வெற்றியை ருசித்து இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதற்கான 5 முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்.
உள்கட்சி மோதல்: காங்கிரஸ் கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 31 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போதைய நிலவரப்படி பார்த்தால் இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு இதே எண்ணிக்கைதான் கிடைக்கும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்கட்சி மோதல் உள்ளது. ஹரியானா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட அதிகார மோதலில் ஈடுபட்டனர். பூபிந்தரர் சிங் ஹூடா மற்றும் குமாரி செல்ஜா இடையேயான மோதல் வெளிப்படையாக இருந்தது. இதுபோன்ற மோதல்கள் காங்கிரஸ் கட்சிக்கு களத்திலும் பின்னடவை கொடுத்துள்ளது.
பிராந்திய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள்: காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளில் பாஜகவை விட சொற்ப வாக்குகளே குறைவாக பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களும் பிராந்திய கட்சிகளும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சுயேட்சை வேட்பாளர்கள் அறுவடை செய்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறிவிட்டது.
ஜாட் சமூக வாக்குகள்: காங்கிரஸ் கட்சி ஹரியானாவில் பெரும்பான்மையாக உள்ள ஜாட் சமூகத்தினரின் வாக்குகளை பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. மறுபக்கம் பாஜகவோ.. ஜாட் அல்லாத சமூகத்தினரின் வாக்குகளை ஒருங்கிணைத்து தங்களுக்கு சாதகமாக மாற்றியது. இதனால், ஜாட் சமூக வாக்குகள் அதிகம் கிடைக்காவிட்டாலும் பிற சமூகத்தினரின் வாக்குகளை பாஜக மொத்தமாக அள்ளியுள்ளது.
பாஜகவின் யுக்தி: பாஜக ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை கையாண்டது. கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களை சரி கட்ட மத்திய அமைச்சர் தார்மேந்திர பிரதானை களமிறக்கியது. தேர்தல் பிரசார குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். தனது வழக்கமான பாணியில் தர்மேந்திர பா பிரதான் தீவிரமக களமாடினார். பாஜகவின் தேர்தல் குழுவும் சுறுசுறுப்பாக பணியாற்றி அதிருபதி வேட்பாளர்களை சரிகட்டுவது, வாக்குகளை சிதறவிடாமல் பெறுவது உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டியது.
நகர்புறங்களில் அசைக்க முடியாத செல்வாக்கு: பாஜகவை பொறுத்தவரை நகர்புறங்களில் அந்த கட்சிக்கு நல்ல செல்வாக்கு நிலவுகிறது. குர்கான் பரிதாபாத் ஆகிய பகுதிகளில் பாஜக வாக்கு வங்கி வலுவாக உள்ளது. ஊரக பகுதிகளில் மொத்தமாக வென்று விடலாம் என காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால், காங்கிரஸ் நினைத்த மாதிரி ஊரக பகுதிகளில் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவிலை. குர்கான், பரிதாபாத் மற்றும் பல்லப்கர்க் ஆகிய நகரப்புற பகுதிகளில் இம்முறையும் பாஜக தனது செல்வாக்கை இழக்காமல் வாக்குகளை குவித்தது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications