இன்ஸ்டாகிராம் சாட்.. காதலால் வீழ்ந்த வீரம்.. அம்ரித்பால் சரண் அடைந்தது ஏன்? காரணமே அந்த பெண்தான்!
சண்டிகர்: அம்ரித்பால் சிங் கைதானதிற்கு பின் அவரின் மனைவி முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்பில் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் இன்று போலீசில் சரண் அடைந்தார். அம்ரித்பால் சிங் கடந்த மார்ச் 18ம் தேதியில் இருந்து தேடப்பட்டு வந்தார். இவரை மூன்று போலீசார் படை தேடி வந்த நிலையில் பஞ்சாப்பில் இருக்கும் மோகா என்ற கிராமத்தில் இவர் போலீசில் சரண் அடைந்தார்.

இதையடுத்து தற்போது பஞ்சாப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தை காரணம் காட்டி பஞ்சாப்பில் மோதல், கலவரம் ஏற்பட கூடாது என்று அங்கே மிகப்பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இத்தனை நாட்கள் ஆட்டம் காட்டிக்கொண்டு இருந்த அம்ரித்பால் சிங் திடீரென போலீசில் சரண் அடைந்தது ஏன் என்று வெளியாகி உள்ளன.
காரணம் மனைவி?: அம்ரித்பால் சிங் கைதானதிற்கு பின் அவரின் மனைவி முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்ரித்பால் சிங் நினைத்து இருந்தால் இந்தியாவை விட்டே வெளியேறி இருக்க முடியும்.
ஆனால் அவரால் முடியவில்லை. காரணம் அவரின் மனைவி. அம்ரித்பால் சிங் கனடாவிற்கு தப்பி ஓடலாம் என்று இருந்துள்ளார். ஆனால் அவரின் மனைவி இங்கே மாட்டிக்கொண்டதால் அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

அவரின் மனைவி கிரன்தீப் கார் இங்கிலாந்தை சேர்ந்தவர். இந்திய பூர்வீகம் என்றாலும் இங்கிலாந்தில் செட்டிலாகி, அங்கேயே குடியுரிமை பெற்றவர். கிரனை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம்தான் இவர்களுக்கு இடையில் திருமணம் நடந்தது. வரும் ஜூலை மாதம் இவரின் விசா கால அவகாசம் முடிவிற்கு வருகிறது. சமீபத்தில் இவர் லண்டனுக்கு தப்பி செல்ல முயன்றார். ஆனால் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வைத்து தடுக்கப்பட்டார்.
அதில் இருந்து போலீசார் இவரை கண்காணித்து வந்தனர். அம்ரித்பால் சிங் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினால்.. இங்கே கிரனை கைது செய்து அம்ரித்பால் சிங்கிற்கு போலீஸ் நெருக்கடி கொடுக்கும்.
தன் மனைவி பாதுகாப்பாக தப்பி சென்ற பின் நாம் தப்பி செல்லலாம் என்று அம்ரித்பால் சிங் காத்துகொண்டு இருந்தார். ஆனால் அதற்குள் அம்ரித்பால் சிங் சிக்கிக்கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு.. அதன்பின் காதலில் விழுந்து உள்ளனர்.

என்ன குழு?: இவர்களுக்கு திருமணம் நடந்து சில நாட்களில்தான் அம்ரித்பால் சிங் குழுவினர் போலீஸ் நிலையத்தை தாக்கினர். 'Waris Punjab De'அமைப்பின் குழுவினர்தான் இந்த தாக்குதலை நடத்தியது.
கடந்த பிப்ரவரியில், அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை காட்டி போலீஸ் நிலைய தடுப்புகளை உடைத்து போலீசாருடன் சண்டை போட்டு தங்கள் குழுவை சேர்ந்த ஒருவரை விடுதலைசெய்தனர் .
இதையடுத்து அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீசார் முடிவு செய்த ஆபரேஷனை தொடங்கினார். கடந்த ஒரு மாதமாக தேடப்பட்டு வந்த அம்ரித் பால் சிங் நேற்று போலீசாரிடம் சரண் அடைந்தார். மனைவி கைது செய்யப்படுவதை தவிர்க்க.. இவர் வெளிநாடு செல்லாமல் போலீசில் சரண் அடைந்து உள்ளார்,;
அம்ரித்பால் சிங் காலிஸ்தான் - பாகிஸ்தான் தீவிரவாதி, ஏஜென்ட் என்று அரசால் வர்ணிக்கப்பட்டு வருகிறார். காலிஸ்தான் கருத்துக்களை பேச்சாளராக, பிரிவினைவாதியாக இவர் பார்க்கப்படுகிறார். காலிஸ்தான் தீவிரவாதி ஜர்னல் சிங் பின்டர்ன்வாலேவின் தீவிர பின்தொடர்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்டர்ன்வாலே 2.0 என்று அம்ரித்பால் சிங் அவரின் பின்தொடர்பாளர்கள் மூலம் வரையறுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications