60 வயது பாட்டியை கூட விடவில்லை.. கொடூரமாக வன்புணர்வு செய்த 27 வயது இளைஞன்.. 20 ஆண்டுகள் சிறை
சண்டிகர்: சண்டிகரில் கடந்த 2018ம் ஆண்டு மனநலன் பாதிக்கப்பட்ட 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 27 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "வயதானவர்களையும், மனநலன் பாதிக்கப்பட்டவர்களையும் மரியாதையுடன் நடத்தும் நமது பாரம்பரியத்தை குற்றவாளி மீறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.
குற்றவாளிக்கு சிறை தண்டனையுடன் ரூ.35,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ
சண்டிகரில் உள்ள கிஷன்கரில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான சந்தீப் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் இருந்த மனநலன் பாதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத் தக்க மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மூதாட்டியினுடைய மகனின் நண்பனான சிறுவன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவம் வெளிசத்திற்கு வந்துள்ளது.

பாலியல் பலாத்காரம்
நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது இளைஞர் ஒருவர் தனது நண்பனின் தாயை பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்ததை பார்த்து சிறுவன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து வெளியே வந்த அந்த இளைஞன் சிறுவனை தள்ளிவிட்டு ஓடியுள்ளார். சம்பவம் குறித்து தனது நண்பனுக்கு சிறுவன் தெரியப்படுத்தியதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தீர்ப்பு
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் விசாரணையில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்த மூதாட்டியால் விளக்கி கூற முடியவில்லை. மனநலன் பாதிக்கப்பட்டிருப்பதால் மூதாட்டியிடமிருந்து வாக்குமூலம் பெற முடியவில்லை. சம்பவம் குறித்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இழிவான செயல்
மூதாட்டியின் 30 வயது மதிக்கத்தக்க மகனின் நண்பனான சிறுவன் பதிவு செய்திருந்த 40 விநாடி கொண்ட அந்த வீடியோதான் வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உத்தரகாண்ட்டை சேர்ந்த 27 வயது இளைஞன் குற்றவாளி என நீதிபதி உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பில் இந்த இளைஞனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், "வயதானவர்களையும், மனநலன் பாதிக்கப்பட்டவர்களையும் மரியாதையுடன் நடத்தும் நமது பாரம்பரியத்தை குற்றவாளி மீறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் செய்திருப்பது இழிவான செயல்" என்றும் நீதிபதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications