தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவிக்கு வாய்ப்பு? ரேஸில் 5 பேர்!
சென்னை: தமிழகத்தில் ஆட்சியை பிடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ராஜ்யசபா எம்பி யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வாய்ப்பு விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அல்லது தமிழகத்தில் தவெகதான் வெல்லும் என சரியாக கணித்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவிக்கு வழங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் ஜூன் 21 மற்றும் ஜூலை 19 ஆகிய தேதிகளில் ஆந்திரா (4), குஜராத் (4), கர்நாடகா (4) உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 24 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிமுகவின் சி.வி. சண்முகம் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காலியாக உள்ள ஒரு இடத்திற்கான இடைத்தேர்தல் மற்ற மாநிலத் தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இந்த இடத்தில், தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தனது வேட்பாளரை நிறுத்தப் போவது உறுதியாகியுள்ளது.
த.வெ.க. சார்பில் டெல்லிக்குச் செல்லப்போகும் அந்த முதல் எம்பி யார் என்ற ரேஸில் பல முக்கியப் பெயர்கள் அடிபடும் வேளையில், சர்ச்சைக்குரிய ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டின் பெயரும் இடம் பெற்றுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட்?
ஈரோட்டில் பிறந்த வெற்றிவேல் என்ற இவர், பின்னர் சிங்கப்பூர் சென்று தனது பெயரை 'ரிக்கி ரத்தன் பண்டிட்' என மாற்றிக் கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக இருந்தவர்.
சர்ச்சை: அண்மையில் முதலமைச்சர் விஜய்யின் 'சிறப்பு அதிகாரி' (OSD - Officer on Special Duty) ஆக இவர் நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியது. ஒரு ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்குவதா என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, உடனடியாக அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பட்டியலில் உள்ள பிற முக்கியப் பிரமுகர்கள்
ரிக்கி ரத்தன் பண்டிட் தவிர த.வெ.க.வின் பரிசீலனையில் உள்ள பிற முக்கியப் பெயர்கள்:
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி
விஷ்ணுரெட்டி
அரசியல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி (கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர்)
ஜெகதீஷ் (விஜய்யின் தனிச்செயலாளர்)
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்
விஜய் தனது முதல் எம்பி சீட்டை ஒரு நிர்வாகத் திறமையாளருக்கு வழங்குவாரா, தனது விசுவாசிகளுக்கு வழங்குவாரா அல்லது மீண்டும் சர்ச்சைக்குரிய முகத்தைத் தேர்ந்தெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு!












Click it and Unblock the Notifications