'சிக்ஸர் சித்து'.. 34 வருடம் துரத்தி பழிதீர்த்த கொலை கேஸ்.. இன்று விடுதலையாகிறார் நவ்ஜோத் சிங் சித்து
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, 34 ஆண்டுகள் முந்தைய வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு சிறை சென்றிருந்தார். இந்நிலையில் 10 மாதங்களுக்கு பின்னர் இன்று அவர் விடுதலை ஆகிறார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸின் முக்கிய முகமாக அறியப்பட்டவர் சித்து. பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு வந்த இவருக்கும் அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்குக்கும் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அம்ரீந்தர் சிங் கட்சியை விட்டே சென்றுவிட்டார்.
இவ்வளவு சலசலப்புகளுக்கும் காரணமான நவ்ஜோத் சிங் சித்து மீது பழைய வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வந்தது. அதாவது, கடந்த 1988ம் ஆண்டு கார் பார்க்கிங் சம்பந்தமாக இவருடைய நண்பருக்கும் ஒரு முதியவருக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

சித்து
இந்த பிரச்னையையடுத்து சித்து அந்த முதியவரை காரிலிருந்து கீழே இழுத்து தள்ளியிருக்கிறார். இந்த எதிர்பாராத தாக்குதலில் முதியவர் நிலை குலைந்ததோடு, படுகாயமும் அடைந்திருக்கிறார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சித்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஹரியானா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் சித்து குற்றவாளி என்றும் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து சித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

விடுதலை
மேல் முறையீடு வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு மே 19ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில் நவ்ஜோத் சிங் சித்து குற்றவாளி என்றும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி கூறியிருந்தார். மேலும், நீதிமன்றத்தில் சித்து ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சித்து நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நன்னடத்தை
இதனையடுத்து ஏறத்தாழ ஓராண்டு காலம் சித்து சிறை வாசம் அனுபவித்து வந்த நிலையில் இன்று அவர் பாட்டியாலா சிறையிலிருந்து விடுதலையாகிறார். இவருக்கு மே மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் சிறையில் நல்ல விதமாக நடந்துக்கொண்டதால் நன்னடத்தை விதிகளின்படி ஒரு மாதத்திற்கு முன்னரே விடுதலை ஆகிறார். இவர் சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லெட்டர்
நன்னடத்தை விதிகளின்படி, குடியரசு தினமான கடந்த ஜனவரி 26ம் தேதியே சித்து விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியானது,.. ஆனால், அப்போது அவர் விடுதலை செய்யப்படவில்லை... இதற்கு நடுவில், சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது.. அவர் கடுமையான புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.. இன்வேசிவ் கேன்சர் எனப்படும் ஊடுருவும் புற்றுநோய் பாதிப்பின் 2-வது கட்டத்தில் அவர் உள்ளதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.. சித்து ஜெயிலில் இருந்தபோதே, தனக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு குறித்து, கடிதம் மூலம் அவருக்கு நவ்ஜோத் தெரியப்படுத்தியிருந்தார்.. புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது அவர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், சித்து ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார்.. இது நவ்ஜோத்துக்கு பெருத்த ஆறுதலையும், நிம்மதியும் தந்து வருகிறது.

எக்கச்சக்க எதிர்பார்ப்பு
அதுமட்டுமல்ல, இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டி உள்ளது.. ஜலந்தர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 40 நாட்களே இருக்கும் நிலையில், சித்து விடுதலையாவது அம்மாநில அரசியல் களத்தில் கவனத்தை திருப்பி உள்ளது.. ஒருவேளை மறுபடியும் தேர்தலில் போட்டியிடுவாரா? போட்டியிட்டாலும் வெற்றி பெறுவாரா? ஏற்கனவே, சொந்த கட்சிக்குள் எக்கச்சக்க அதிருப்திகள் படிந்துள்ள நிலையில், சித்துவுக்கான வரவேற்புகள் இனி எப்படி இருக்க போகின்றன? இதற்கு நடுவில், பாஜக என்ன செய்ய போகிறது? என்பதெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளன...!!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications