40 நிமிடம்.. பஞ்சாப் துணை முதல்வர் காரை முடக்கிய பாஜகவினர்.. மோடி வாழ்க என கோஷமிட்ட பின் விடுவிப்பு!
சண்டிகர்: பஞ்சாப் துணை முதல்வர் ஓபி சோனியின் கார் பாஜகவினர் மூலம் சாலையில் முடக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி பஞ்சாப்பில் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இது மிகப்பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை இன்று விசாரிக்க உள்ளது.
பஞ்சாப்பிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்த போராட்டம் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பி சென்றார். இதில் எஸ்பிஜி படை மீதும், பஞ்சாப் அரசு மீதும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாப் மோடி
இந்த விவகாரம் காரணமாக தற்போது பஞ்சாப்பில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிதான் பிரதமர் மோடிக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என்று பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பிரதமருக்கு வேண்டுமென்று போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. போராட்டம் நடக்க இருந்தது தெரிந்தும் பிரதமர் மோடி அதை தடுக்கவில்லை என்று பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

பஞ்சாப் முதல்வர் சன்னி
இந்த நிலையில் பஞ்சாப் துணை முதல்வர் ஓபி சோனியின் காரை பாஜகவினர் மறித்து உள்ளனர். பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டி ஓபி சோனியின் காரை பாஜகவினர் சண்டிகரில் மறித்தனர். அவரின் கார் செல்லும் வழியில் தயாராக நின்ற பாஜகவினர் அப்படியே சாலையை மறித்து அவரின் காரை நகர விடாமல் சுற்றி வளைத்தனர். இதனால் துணை முதல்வர் ஓபி சோனி கார் அங்கேயே முடங்கியது.

பஞ்சாப் துணை முதல்வர் ஓபி சோனி
துணை முதல்வர் ஓபி சோனியின் பாதுகாவலர்கள் எவ்வளவு முயன்றும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் துணை முதல்வர் ஓபி சோனியின் கார் எங்கும் செல்ல முடியாமல் முடங்கியது. இதையடுத்து கார் கண்ணாடியை திறந்து துணை முதல்வர் ஓபி சோனி அங்கிருந்த போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அங்கு இருந்த பாஜகவினர் சமாதானம் அடைவதாக இல்லை.

பாஜக பஞ்சாப்
அதிலும் பாஜகவினர் தொடர்ந்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பி வந்தனர். இதனால் துணை முதல்வர் ஓபி சோனியின் கார் 40 நிமிடம் சாலையிலேயே முடங்கியது. அவரின் கார் எங்கும் நகர முடியவில்லை. இதையடுத்து பொறுமை இழந்த துணை முதல்வர் ஓபி சோனி, பிரதமர் மோடி வாழ்க என்று கூறினார். அவருக்கு பணி நிமித்தமாக செல்ல வேண்டி இருந்ததால் வேறு வழியின்றி பிரதமர் மோடி வாழ்க என்று கூறினார்.
Recommended Video

மோடி பாதுகாப்பு
இதை கேட்டு அங்கு இருந்த பாஜகவினர் குஷி அடைந்தனர். அப்படி வாங்க வழிக்கு என்பது போல கோஷம் எழுப்ப தொடங்கினர். இதையடுத்து பாஜகவினர் வரிசையாக சந்தோஷத்தில் கைதட்டினார்கள். கடைசியில் துணை முதல்வர் ஓபி சோனியின் காருக்கு வழிவிடப்பட்டது. 40 நிமிடங்கள் முடங்கிய அவர் ஒருவழியாக காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications