விவசாயிகள் மிளகாய் பொடியை கொட்டி கட்டைகளை எரித்து வருகின்றனர்.. ஹரியாணா போலீஸ் பரபர குற்றச்சாட்டு!
சண்டிகர்: விவசாயிகள் போலீசாரை சுற்றி வளைத்து, மரக்கட்டைகளை எரித்து அதில் மிளகாய்ப் பொடியைக் கொட்டி எரியவிட்டனர் என்றும் போலீசார் மீது தடிகளால் தாக்கினர் என்றும் ஹரியாணா போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுக்கு எதிராக டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களை டெல்லி நோக்கி முன்னேறவிடாமல் தடுக்க காவல்துறையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியாணாவை ஒட்டிய ஷாம்பு எல்லையில் 14 ஆயிரம் விவசாயிகள் குவிந்து உள்ளனர். ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், மற்றும் ஏராளமான வாகனங்களில் விவசாயிகள் டெல்லி நோக்கிச் செல்வதற்காக குவிந்துள்ளனர். விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க பஞ்சாப், ஹரியாணா என டெல்லியை ஒட்டிய எல்லைகளில் போலீசார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கான்க்ரீட் தடுப்புகள், வாகனங்கள் முன்னேற இயலாத வண்ணம் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட தடுப்புகள் என விவசாயிகளை தடுப்பதற்காக போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். காசிபூர் எல்லையில் 2 பாதைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் குவிந்துள்ள பகுதிகளில் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.
ஹரியானாவின் அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லைப் பகுதியில் பல அடுக்கு தடுப்புகளை நோக்கி நகரத் தொடங்கிய விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டுகளால் போலீசார் சுட்டதில் விவசாயி ஒருவர் இன்று பலியானதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 24 வயதான இளம் விவசாயி சுப் கரன் சிங் என்பவரை காவல்துறையினர் சுட்டதாகவும், ரப்பர் குண்டு தாக்கியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாகவும் விவசாய சங்கத்தினர் கூறுகின்றனர். ஆனால் ஹரியானா காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹரியாணா காவல்துறையினர், போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். டாதா சிங் - கனோரி எல்லையில், போராட்டக்காரர்கள் காவல்துறையினரை அனைத்துப் பக்கங்களிலும் சுற்றி வளைத்து, மரக்கட்டைகளை எரித்து புகையைப் பரப்பினர். மேலும், அதில் மிளகாய்ப் பொடியை கொட்டி எரிய விட்டனர். இதனால், போலீசார் கண் எரிச்சலில் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என ஹரியாணா காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் போலீசார் மீது போராட்டக்காரர்கள் தடிகளால் தாக்கினர் என்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் என்றும், இந்த தாக்குதலில் சுமார் 12 போலீசார் படுகாயமடைந்தனர். நாங்கள் அமைதிக்காக போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று ஹரியாணா காவல்துறை தெரிவித்துள்ளது. போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கியதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக ஹரியாணா போலீசார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications