பேத்தி திருமணத்தில் பாடகரான பஞ்சாப் முதல்வர் - பிரஷாந்த் கிஷோர் வேலையை தொடங்கிட்டாரோ?
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தனது பேத்தி திருமணத்தில் பாட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
பஞ்சாபில் கடந்த 2017ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் வியூகங்களை வகுத்து தரும் பணியை பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு 2022ல் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் முதன்மைச் செயலராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தனது சிஸ்வான் பண்ணை இல்லத்தில் அவரது பேத்தி செஹரிந்தர் கவுரின் திருமணத்தின் போது பாட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

1:26 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவில், பிசிறில்லாமல், எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், ஏதோ ஒரு தேர்ந்த பாடகரைப் போல பாட்டுப் பாடியிருக்கிறார் கேப்டன் அமரீந்தர் சிங். விழாவில் கலந்து கொண்டவர்கள் அமைதியாக கேப்டனின் பாடலை கண்டு ரசிக்க, பேத்தி செஹரிந்தர் தாத்தாவின் அன்பால் நெகிழ்ந்து போனார்.
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதித்யா நாரங் - செஹரிந்தர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.28) நடந்தது.
இது குடும்ப நிகழ்வு தான் என்றாலும், முதல்வர் அமரீந்தர் சிங்கை இப்படி பாட்டு பாடச் செய்து, அந்த வீடியோவை வைரல் ஆக வைத்து பிரஷாந்த் கிஷோர் தனது பணியை இப்போதே துவக்கிவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications