பெட்ரூமில்.. கட்டிலுக்கு அடியில்.. "துரோகம்" செய்த இளம் மனைவி.. மிரண்டு போன போலீசார்..!
கணவனை கொன்ற மனைவி கைதானார்
சண்டிகர்: கள்ளக்காதல் வெறி தலைக்கு மேலே ஏறியதால், கட்டிய கணவனை கொலை செய்து கட்டிலுக்கு அடியில் ஒரு வாரம் வைத்திருந்தார் அதிசய மனைவி..!
ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. தினேஷ் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார்.. ஒருநாள் திடீரென தினேஷ் காணாமல் போய்விட்டார்.
பிறகு கடந்த ஜனவரி 28ம் தேதி தாபூவா காலனி பகுதியில், ஒரு சாக்கடையில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.. இந்த தகவல் போலீசுக்கு பறந்தது..

சம்பவம்
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர். இறந்தது தினேஷ்தானா என்பதில் சந்தேகம் இருந்ததால், அவரது மனைவியை உடலை அடையாளம் காட்டுமாறு சொன்னார்கள். ஆனால் அவரோ, சடலத்தை சரியாக பார்க்காமல் தவிர்த்தார், அரைகுறையாக பதிலை சொன்னார். இதனால் போலீசாருக்கு அவர் மீது மொத்தமாக சந்தேகம் திரும்பியது..

கண்ணீர்
கிடுக்கிப்பிடி விசாரணையும் ஆரம்பமானது.. இறந்துபோன தினேஷ் ரியல் எஸ்டேட் வேலை செய்து வந்தவராம்.. மனைவிக்கு நிதின் என்பவருடன் கள்ளக்காதல் இருந்திருக்கிறது.. இந்த விஷயம் தினேஷூக்கு தெரிந்துவிடவும், மனைவியை கண்டித்துள்ளார்.. தகராறு செய்துள்ளார்.. கண்ணீர் விட்டு கதறி உள்ளார்.. ஆனாலும் கள்ளக்காதலர்கள் தினேஷின் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்துள்ளனர். அத்துடன் தினேஷை தீர்த்து கட்டவும் முடிவு செய்துள்ளனர்.

கட்டில்
அதன்படி, ஜனவரி 11-ம் தேதி இரவு தினேஷை நிதின் கெட்டியாக பிடித்து கொள்ள, மனைவி கட்டையாலேயே தலையை அடித்து நொறுக்கி உள்ளார்.. மண்டை இரண்டாக பிளந்து தினேஷ் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டார்.. பிறகு, அந்த சடலத்தை 2 பேரும் சேர்ந்து ஒரு சாக்குப் பையில் கட்டினர்.. கட்டிலுக்கு அடியில் சடலத்தை உள்ளே தள்ளிவிட்டனர்.. ஒரு வாரம் அந்த சடலம் பெட்ரூமிலேயே இருந்திருக்கிறது..

கைது
இவர்களும் சகஜமாகவே அந்த வீட்டில் இருந்துள்ளனர்.. அதற்கு மேல் குப்பென்று நாற்றம் வர ஆரம்பித்துவிடவும், வேறு வழியில்லாமல், நிதின் தன் நண்பர்களை வரவழைத்து பிணத்தை எடுத்து கொண்டு அந்த சாக்கடையில் வீசிவிட்டு போயுள்ளனர்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.. மேலும் நிதினுக்கு உதவி செய்த, நண்பர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.. இந்த நண்பர்களுக்கு 41,000 ரூபாய் பணம் தந்தாராம் நிதின்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications