Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச படத்திற்கு அடிமை.. தினமும் 3 முறை உடலுறவு கேட்ட மனைவி.. விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு ஓடிய கணவர்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: தனது மனைவி ஆபாசப் படத்துக்கு அடிமையாகிவிட்டதாகவும், இரவில் குறைந்தது 3 முறை உடலுறவு கொள்ளக் கேட்பதாகவும் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு ஒரு நபர் மனுத் தாக்கல் செய்திருந்தார். குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்த நிலையில், அதை எதிர்த்து அந்த பெண் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது.

இந்த காலத்தில் விவாகரத்து என்பது கணிசமாக அதிகரித்தே வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரியும் போது விவாகரத்துக்கள் நடைபெறுகிறது.

relationship marriage divorce

அதேநேரம் சில நேரங்களில் நாம் துளியும் எதிர்பார்க்காத வினோத காரணங்களுக்காகக் கூட விவாகரத்து நடக்கும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது பஞ்சாபில் நடந்துள்ளது.

வழக்கு: இந்த தம்பதிக்குக் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவனின் குடும்பத்தினருடன் அந்த பெண் சில காலம் மட்டுமே தங்கி இருக்கிறார். அதன் பிறகு அந்த பெண் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்தச் சூழலில் அந்த கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர், தனது மனைவி ஆபாசப் படங்கள் மற்றும் மொபைல் கேம்களுக்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்பட்டு இருந்தது. மேலும், தினசரி உடலுறவு வேண்டும் என்றும் டார்ச்சர் செய்துள்ளார். ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முறையாவது உடலுறவு கொள்ள வேண்டும் என அந்த பெண் டார்ச்சர் செய்ததாகத் தெரிகிறது.

கிண்டல்: கணவனால் அதிக நேரம் உடலுறவு கொள்ள முடியாமல் போனால் அதற்காகக் கேலி செய்ததாகவும் அந்த கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதையே காரணமாகக் காட்டி வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியதாக அந்த நபர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருக்கிறது. தன்னை ஆண்மையற்றவன் என்று பல முறை அந்த பெண் கூறி மனரீதியாகக் கொடுமைப்படுத்தியதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

பெண் தரப்பு: அதேநேரம் அந்த பெண் இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், தான் ஆபாசப் படத்திற்கு அடிமையான சொல்லப்பட்டுள்ள புகாருக்கு எந்தவொரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று பெண் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. கணவரே தன்னை கட்டாயப்படுத்தி வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும் அங்கிருந்தவரை மாமியாரும் உறவினர்களும் சேர்ந்து தனக்குத் தாயத்தைக் கட்டியும் போதைப் பொருளைக் கொடுத்தும் மயக்கத்திலேயே வைத்திருந்தாக குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், "இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் சரிசெய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது" என்பதைக் குறிப்பிட்டு விவாகரத்து அளித்தனர். இதற்கு எதிராக அந்த பெண் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

விவாகரத்து: வழக்கை விசாரித்த பஞ்சாப் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்ட குடும்பநல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் நீதிமன்றம், "கணவனை ஆண்மையற்றவன் என அழைப்பதும், அவரது தாயிடமே சென்று இப்படியொரு மகனை நீங்கள் பெற்றுள்ளீர்கள் எனச் சொல்வதும் மன ரீதியாகக் கொடுமைப்படுத்துவதுதான்.

திருமணத்தில் மன ரீதியாகக் கொடுமை என்பதை நிரூபிக்க இன்னொரு நபரின் நடத்தை இணைந்து வாழ முடியாத அளவுக்கு இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும். அது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அது சேர்ந்து வாழ முடியாத அளவுக்கு மோசமானதாக இருக்க வேண்டும். இந்த கேஸில் அப்படி இருக்கிறது" எனக் கூறி விவாகரத்தை உறுதி செய்தனர். மேலும், போதைப் பொருள் மற்றும் குடும்ப வன்முறை குறித்து அந்த பெண் அளித்த புகாரை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+