தமிழகத்தில் 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 16ஆவது சட்டசபை பொதுத் தேர்தல் நேற்று முன் தினம் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. தமிழகத்தில் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். அன்று நடந்த தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாவட்ட அளவில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் குறைந்த அளவாக 59.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

4.57 கோடி
தொகுதி அளவில் பார்த்தோமேயானால் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதமும் , குறைந்த அளவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதமும் பதிவாகியிருந்தன. பதிவான மொத்த வாக்கு சதவீதத்தை பார்க்கும்போது 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

கொரோனா
மீதமுள்ள 1.71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. கொரோனா பரவல் காரணமாக வாக்குப் பதிவு குறைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் எல்லா பூத்துகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. வாக்குப் பதிவு சதவீதத்தில் கடைசி நிலையில் உள்ள சென்னை மாவட்டத்தில் கொரோனாவால் வேலையை இழந்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

அச்சுறுத்தல்
அது போல் ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி இருப்பதால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனாலும் வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அது போல் கொரோனா அச்சுறுத்தலும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இயலவில்லை
சென்னைக்கு வேலைத் தேடி வந்த பெரும்பாலானோருக்கு சென்னையில் வாக்கு இருந்த போதிலும் மேற்கண்ட காரணங்களினால் அவர்களால் வர இயலவில்லை. மேலும் தொலைதூர மாவட்டங்களில் இருப்போர் 6 முதல் 12 மணி நேரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஒரு நாள் விடுப்புக்காக போக வர 12 முதல் 24 மணி நேரம் பயணம் செய்ய இயலாத நிலையும் ஒரு காரணமாகும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications