குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா.. உயிரிழப்பும் சரிகிறது!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,891பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு 26,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

குறைந்த கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே இந்த அளவுக்கு கொரோனாவை குறைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2,000-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

மொத்த பாதிப்பு எவ்வளவு?
இதனால் மொத்த பாதிப்பு 25,41,168 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். ஈரோட்டில் 3 பேர் இறந்துள்ளனர். சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவுக்கு 33,809 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 2,423 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,81,201பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னையில் மீண்டும் அதிகரிப்பு
26,158 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,40,440 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,51,02,763 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 138 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. ஈரோட்டிலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

சேலம் நிலை என்ன?
கோவையில் மட்டும் 183 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 102 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 45 பேருக்கும், மதுரையில் 30 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 36 பேருக்கும், திருவள்ளூரில் 69 பேருக்கும், திருச்சியில் 71 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 97 பேருக்கும், விருதுநகரில் 17 பேருக்கும், ஈரோட்டில் 141 பேருக்கும், சேலத்தில் 119 பேருக்கும், நாமக்கல்லில் 59 பேருக்கும், தஞ்சாவூரில் 90 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications