"முளைச்சு 3 இலை விடல".. இவரெல்லாம் அவ்ளோ வொர்த் கிடையாது.. சொல்றது யார் பாருங்க.. செம கடுப்பில் திமுக
சென்னை: உதயநிதி தலைக்கு 10 கோடியா? இதெல்லாம் ரொம்ப அதிகம் என்று பாஜகவின் பென் கவுன்சிலர் பேசிய பேச்சு திமுகவை எரிச்சலூட்டி வருகிறது.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கொந்தளித்து வருகிறது.. அமித்ஷா முதல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரை கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"சனாதனம் குறித்து பேசி திமுக மீதுள்ள அதிருப்தியை திசைத்திருப்ப முயலும் உதயநிதி ஸ்டாலின், திமுகவில் சமதர்மம் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்" என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
உதயநிதி பேச்சு: இதனிடையே, உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் என்ற உத்தரபிரதேச சாமியார் விவகாரமும் வெடித்து கிளம்பி உள்ளது. மற்றொருபக்கம், உதயநிதி ஸ்டாலின் மீது சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இன்னொருபக்கம் டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் மூத்த தலைவர்கள் குழு எதிர்ப்பு கடிதத்தையும் அனுப்பியிருக்கிறார்கள்.
புகார்கள்: இதனிடையே, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாங்களாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் தூதர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கடிதம் எழுதியுள்ளனர்.
இப்படி நாலாபக்கமும் எதிர்ப்புகள் பதிவாகி வரும்சூழலில், உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.. தன்மீது போடப்பட்டுள்ள, அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் உறுதி தெரிவித்திருக்கிறார்.. அதேபோல, கொலை மிரட்டல் விடுத்த சாமியார் மீது வழக்குப்போடுவது, உருவ பொம்மை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விமர்சனம்: எனினும், உதயநிதி மீதான விமர்சனத்தை பாஜக தரப்பு நிறுத்தவில்லை. "யார் யாரோ வந்து முயற்சி செய்து பார்த்தும் சனாதனத்தை ஒழிக்க முடியல.. முளைத்து 3 இலை விடாத உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வந்துட்டாராம்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்..
முதல்வராக இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை உள்ள நீங்கள், தந்தை பாசத்தினால் உதயநிதிக்கு நேசக்கரம் நீட்டுவது நியாயமா? பாசமா? கடமையா? என்கிற போது கடமையை மறந்து பாசத்திற்கு இடம் கொடுத்து விட்டீர்களே? என்று பாஜகவின் மூத்த தலைவர் நாராயண் திருப்பதி கேள்வி எழுப்பிருக்கிறார்.
மாறி மாறி புகார்கள்: ஆக, உதயநிதியை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தரப்பினரும், சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினரும் மாறி மாறி போலீசில் புகார்களை தந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், சென்னை மேற்கு மாம்பல பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதில், "சாது அவர்கள், உதயநிதி தலைக்கு எவ்ளோ அறிவிச்சாரு? ரூ.10 கோடி பரிசா? இப்படி அறிவித்ததே தப்பு.. 10 கோடியெல்லாம் ரொம்ப அதிகம்.. அந்த அளவுக்கு உதயநிதி வொர்த் இல்ல.. ரொம்ப ரொம்ப அதிக விலை.. மற்ற விஷயங்களுக்கெல்லாம் விலைவாசி பேசும் நாம், இதுக்கும் பேசக்கூடாது.. 10 கோடி என்பது ஜாஸ்தியான விலை" என்று பேசியிருக்கிறார்.
ஆத்திரம்: சாமியார் மீது ஏற்கனவே கடுப்பில் இருந்து வரும் உடன்பிறப்புகள், உமா ஆனந்த் பேசிய இந்த பேச்சினை கேட்டும், ஆத்திரம் அடைந்துள்ளனர்.. இவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுக்க தொடங்கிவிட்டார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications