தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்.. நீலகிரி ஆட்சியராக லட்சுமி பவ்யா நியமனம்.. அரசு அதிரடி
சென்னை: ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சந்திரகலா ஐஏஎஸ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா ஐஏஎஸ் புதுக்கோட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி, நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சந்திரகலா ஐஏஎஸ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த வளர்மதி சமூக நலத்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா ஐஏஎஸ் புதுக்கோட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நீலகிரி ஆட்சியராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாகை மாவட்ட ஆட்சியராக பி ஆகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* புதுக்கோட்டை ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கன்னியாகுமரி ஆட்சியராக அழகுமீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ராமநாதபுரம் ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* அரியலூர் ஆட்சியராக ரத்தினசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக க்ரேஸ் லால்ரிண்டிகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications