நாளை தொடங்கும் கத்தரி வெயில்.. இன்றே 10 இடங்களில் சதமடித்த வெயில்.. சென்னை நிலை என்ன தெரியுமா
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது
Recommended Video
புவி வெப்ப மயமாதல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கிறது.
வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி, குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் வெயில் காரணமாகப் பல இன்னல்களை எதிர்கொள்கிறது.

கத்தரி வெயில்
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகக் கத்தரி வெயில் காலத்திற்கு முன்னரே வெயில் உச்சம் தொட்டுவிடுகிறது. அதன்படி இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்த கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த நாட்களில் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிரட்டும் வேலூர்
கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பல இடங்களில் வெளியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மாநிலத்தில் மொத்தமாக 10 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக வேலூரில் வெப்பம் 105 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது,

சதமடித்த வெயில்
வேலூரைத் தொடர்ந்து திருத்தணி மற்றும் திருச்சி நகரங்களில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவு ஆகியுள்ளது. அதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் மற்றும் மதுரை நகர் பகுதியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல ஈரோடு, கரூர் பரமத்தி, தஞ்சை ஆகிய நகரங்களில் வெயிலின் தாக்கம் 102 டிகிரி பாரன்ஹீட்டாக உள்ளது.

10 நகரங்கள்
மேலும், மேற்கு மாவட்டமான சேலத்தில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல பாளையங்கோட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 10 நகரங்களில் இன்று வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. கத்தரி வெயில் நாளை தொடங்கும் நிலையில், நாளை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications