இது எப்படி நடந்தது?.. 10 மாணவர்களுக்கு தொற்று.. பள்ளிக்குள் நுழைந்த கொரோனா?.. ஆவடியில் பரபரப்பு
ஆவடியில் 10 பள்ளி மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உள்ளது
சென்னை: சென்னை ஆவடி அருகே பாலவேடு ஊராட்சி பள்ளியில் 10 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... இதையடுத்து, தொற்று அறிகுறிகள் உள்ள 10 மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை அளித்து பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Recommended Video
ஆவடி அருகே பாலவேடு ஊராட்சியில் விரிவாக்கம் ஒன்றிய அரசு பள்ளி இயங்கி வருகிறது.. இதில் ஊரடங்கு காரணமாக 9 முதல் 10ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பள்ளியில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 10 மாணவர்களுக்கு காய்ச்சல் இருமல் சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளன.

விடுமுறை
பிறகு இதுகுறித்து தகவலறிந்த சுகாதார துறையினர் பாலவேடு மற்றும் ஆலத்தூர் ஊராட்சியில் முகாமிட்டு பள்ளி மாணவர்களுக்கு வீடு தேடி சென்று கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர்... இதனிடையே பரிசோதனை முடிவு வரும் வரை ஒரு வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் இருந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.

அறிகுறி
அடுத்தடுத்து ஒரே பள்ளியில் 10 மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தது கிராமத்தின் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.. இதனால் பள்ளி மாணவர்களின் வருகை குறைந்துள்ளது.. தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறதா அல்லது சாதாரண காய்ச்சல் என்பது குறித்து தெரியவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அன்பில்மகேஷ்
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன... தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், விரைவில் பள்ளிகள் திறக்க முடிவாகி உள்ளது. இந்த பள்ளிகள் திறப்பு குறித்து அடிக்கடி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தியபடியே வந்தது.. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் விரிவாக ஆலோசனையை நடத்தி வந்தார்.

இருக்கைகள்
இறுதியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டது.. ஆனால், அந்த வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிகள் முறையாக கடைப்பிடிக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. வகுப்புறைகளில் சமூக இடைவெளி விட்டு மாணவர்களின் இருக்கைகள் போடப்பட்டிருக்க வேண்டும்,

கோரிக்கை
ஒருவரையொருவர் தொட்டுப் பேசக்கூடாது, கட்டிப்பிடிக்கக் கூடாது, இடைவேளை நேரத்தில் மாணவர்கள் குழுவாக நிற்கக் கூடாது போன்றவை உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், இவைகளை முறையாக கடைப்பிடித்திருந்தால், இன்று 10 மாணவர்களுக்கும் தொற்று பாதித்திருக்காதே என்ற வேதனைகள் ஒலிக்க தொடங்கி உள்ளது.. இனியாவது அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications