குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? லிஸ்ட் ரெடியாம்.. இவங்களுக்கு வாய்ப்பு இல்லையாமே!
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் சேருவதற்கு தகுதியான பயனாளிகளை வருவாய்த்துறையும் மகளிர் மேம்பாட்டுக்கழகமும் ஆய்வு செய்து வருகிறது.
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் சேருவதற்கு தகுதியான பயனாளிகளை வருவாய்த்துறையும் மகளிர் மேம்பாட்டுக்கழகமும் ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவும் தருவாயில் உள்ளது. தகுதியான இறுதி பட்டியல் விரைவில் தயாராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியது.
திமுக அறிவித்த வாக்குறுதிகளில் இந்த வாக்குறுதி மக்கள் மத்தியில் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. திமுக ஆட்சிக்கு வந்து கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை
இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், உயர் மட்ட அதிகாரிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தினார். பொருளாதார ஆலோசனை குழுவுடனும் கலந்து பேசினார். குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டே செயல்படுத்த முடிவு செய்தார். அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்தார்.

யாருக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்
இதையடுத்து, இந்த திட்டத்தில் யாருக்கு மாதம் தோறும் ஆயிரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை அரசு நிர்வாகம் முடுக்கி விட்டு இருக்கிறது. மகளிர் மேம்பாட்டு கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் உள்ள அமைப்புகள் மூலம் தமிழகத்தில் வறுமை கோட்டில் உள்ள ஏழைகள் எத்தனை பேர் உள்ளனர் என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள
சொந்த வீடு இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படும் குடும்பத்தலைவிகளின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. நிலையான வருமானம் இன்றி அன்றாட கூலி வேலை செய்யும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர்? கணவனால் கைவிடப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது
பி.எச்.எச். என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் கார்டு தாரர்களுக்கும் , பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோதயா அன்ன யோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கும் ரூ.1000 கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், இதில் கணவரின் ஆண்டு வருமானம் கணக்கில் எடுக்கப்பட உள்ளதாம். இந்த பட்டியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், " குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இறுதி பட்டியல் விரைவில்
அரசு ஊழியர்கள் மற்றும் மாதம் ரூ.15000 அதிகமாக வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது. இந்த திட்டத்தில் சேருவதற்கு தகுதியான பயனாளிகளை வருவாய்த்துறையும் மகளிர் மேம்பாட்டுக்கழகமும் ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவும் தருவாயில் உள்ளது. தகுதியான இறுதி பட்டியல் விரைவில் தயாராகிவிடும்" என்றார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே?












Click it and Unblock the Notifications