இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் திட்டம்.. "நான் கொடுத்த ஐடியா.." கமல்ஹாசன் சொன்னதை நோட் பண்ணீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் நான் கொடுத்த ஐடியா.. அதை எடுத்துக்கொண்டார்கள் என்று பொறாமைப்படாமல் தமிழக அரசை நான் பாராட்டுகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டம் குறித்து கமல்ஹாசன் கூறியதாவது:- மகளிருக்கு உரிமைத்தொகை கொடுக்கும் திட்டம் நான் கொடுத்த ஐடியா..

 1000 rupees Urimai thogai for women scheme which is adopted by TN Govt is my idea, says kamal hasan

அதை எடுத்துக்கொண்டார்கள் என்று பொறாமைப்படாமல் தமிழக அரசை நான் பாராட்டுகிறேன். அது எந்த அரசாக இருந்தாலும் பாராட்டியே தீர வேண்டும். நான் பாராளுமன்றத்தை பாராட்டுகிறேன்.. என்னுடைய உலகம் முதலில் தமிழ்நாடுதான்.. அவர்களை (மத்திய அரசு) பாராட்டுகிறேன். அதே சமயத்தில் அதை (மகளிர் இட ஒதுக்கீடு) அவுங்க சவுகரியத்திற்காக 2029 -ல் பார்த்துக்கலாம் என்று தள்ளிபோடுவது இதற்கு முன்பாக செஞ்சவங்களின் அதே தப்பின் நீட்சியாகத்தான் இருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய விமர்சனம்.

இலத்தரசிகளுக்கு ஊதியம் என்று சொல்வது என்னுடைய ஐடியாவாக இருக்கலாம். ஐடியா என்பது கடல் காற்று மாதிரி.. நான் காற்று வாங்க போனேன் பீச்க்கு... எல்லாரும் வந்து காற்று வாங்கிட்டு போனா நாளைக்கு இருக்காது எனக்கு காற்று என்று சொல்வது போல இருக்கிறது. இது ஒரு நல்ல ஐடியா.. இதை எடுத்து அந்த அரசு செய்தாலும் அது நல்லது. 33 இட ஒதுக்கீடு என்பது ஒரு சின்ன விமர்சனம் வைக்க விரும்புகிறேன்.

33 சதவிகிதம் என்பதில் எவ்வளவு சதவிகிதம் நிஜம். அந்த பெண்மணிகளை பின்னணியில் இருந்து இயக்கும் அப்பா, அண்ணன் போன்றவை தான் நடந்து கொண்டு இருக்கிறது. அது பெண் சுதந்திரம் ஆக ஆகாது. அது முழுமையான பெண் சுதந்திரம் இல்லை. முழுமையாக வந்துவிட்டது என்றால் 30 கூட போதும். 33 வேண்டாம். பெண்களுக்கு முழு பவரை கொடுத்து விட்டீர்கள் என்றால் 50 சதவிகிதம் தன்னால 5 வருடத்தில் வந்து விடும்.

இதையெல்லாம் பார்த்து அதற்கான முதல் விதையாக இருக்க வேண்டும் என்பதுதான்.. உங்க அம்மா உங்களுக்கே ஒரு சாக்கலேட் வாங்கி கொடுக்க வேண்டும் என்றால் வேனாம் நம்ம கிட்ட எங்க காசு.. நாமெல்லம் ஏழை.. என்று நினைக்கிறார் பாருங்கள்.. அது இல்லாமல் ஒரு சின்ன சுதந்திரத்தை கொடுத்துட்டீங்கன்னா... நான் ஏன் இந்த ஆயிரம் ரூபாயை வைத்து 2 ஆயிரமாக மாற்றக்கூடாது..

நான் ஏன் எதாவது ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது... என்ற அந்த ஆயிரத்தை 2 ஆயிரம் ஆக்கி நீங்கள் கல்லூரியில் போய் படிப்பதற்கான வசதியையும் முடிந்தால் வெளிநாடு போய் படிப்பதற்கான வசதியும் அந்த மாதிரி தாய்மார்கள் ஏற்படுத்தி கொடுப்பார்கள். அவர்களின் பங்களிப்பு எனக்கு தெரியும். அதனால்தான் அவுங்களுக்கு பரிந்துரைத்தேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+