சொன்னபடியே ரிசல்ட்.. 10ம் வகுப்பு மாணவர்களே.. பேப்பர் திருத்தியாச்சு.. பள்ளிக்கல்வித்துறையின் வேகம்
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், ரிசல்ட் எப்போது என்பது குறித்த தகவலும் உறுதியாக உள்ளது.
கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது.. இதுபோலவே, மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது..

பொதுத்தேர்வு: தேர்வு முடிந்ததுமே, ஏப்ரல் 12ம் தேதியே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பமானது.. இதற்காகவே, 88 சென்டர்களில் கிட்டத்தட்ட 50000 ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் 22ம் தேதி வரை திருத்தும் பணிகள் நடந்து முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது..
இதில், 10ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதற்காக மட்டும், மாநிலம் முழுதும், 103 மையங்களில் பணிகள் நடந்தன.. இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்றுடன் முடிவடைந்தன. மதிப்பெண்களை சரிபார்க்கும் பணிகளும் துவங்கியுள்ளன.. இதற்கு பிறகு, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் மட்டும்தான், மிச்சமுள்ளதாக தெரிகிறது..
மதிப்பெண் சரிபார்ப்பு: இதைத்தொடர்ந்து, மதிப்பெண்களின் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்களின் விபரங்களுடன் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் அப்லோடு செய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது..
அரசு தேர்வு துறையின் அலுவல் பணி சார்ந்த ஆன்லைன் தளத்தில், மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டும் வருகின்றன.. எனவே, ஏற்கனவே திட்டமிட்டப்படி மே 10-ம் தேதி தேர்வு முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை தயாராகி வருகிறது.
எப்படி அறிந்து கொள்வது: அந்தவகையில், மாநில அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய வெப்சைட்களில் பார்த்து அறிந்து கொள்ளலாம். அதேபோல எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்தல் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.. இதைத்தவிர, பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், கலெக்டர் அலுவலக வளாகத்திலும், அனைத்து நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வு ஏற்கனவே முடிந்து, விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்று விட்ட நிலையில், வரும், 6ம் தேதி அரசு தேர்வு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன... 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தமும் நேற்றுடன் முடிந்துள்ளதால், பிளஸ் 1க்கு விடைத்தாள் திருத்தம் தற்போது நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications