116 vs 116 : தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்க போகும் பாஜகவின் ஒற்றை சீட்.. குருமூர்த்தி
சென்னை: தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் தவெக 108இடங்களில் வென்றாலும் விஜய் இரண்டு இடங்களில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில் தவெகவிடம் 107 இடங்கள் தான் உள்ளது. காங்கிரஸ் ஐந்து இடங்கள், இடதுசாரிகள் தலா இரண்டு இடங்கள் என 116 இடங்கள் உள்ளன. ஒரு தொகுதியை விஜய் ராஜினாமா செய்யும் காரணத்தால் 233 தான் மொத்த எண்ணிக்கை, 117 இருந்தாலே மெஜாரிட்டிக்கு போதும்.
அதேபோல் அதிமுக, திமுக சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றால், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் உள்ளன. ஒட்டுமொத்தமாக 105 இடங்கள் வருகிறது. பாமக 4 இடங்கள், அமமுக ஒரு இடம், தேமுதிக ஒரு இடம், விசிக ஒரு இடம் என 116 வரும்.. பாஜகவின் சீட்டை சேர்த்தால் தான் அதிமுக திமுக கூட்டணி அல்லது தவெக கூட்டணிக்கு 117 என்கிற எண்ணிக்கை வரும். பாஜகவின் ஒரு சீட் தான் தமிழ்நாட்டின் தலையெத்தையே தீர்மானிக்கும் வாய்ப்பு உள்ளது என்று குருமூர்த்தி ஆங்கில ஊடகத்திடம் விளக்கி உள்ளார்.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இல்லாத ஒன்று இப்போது அரங்கேறி வருகிறது. குதிரை பேர அரசியல், கூட்டணி மாறும் அரசியல் என நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் அரங்கேறி வருகிறது. இதுவரை திமுக, அதிமுக, பாஜக கற்பனையே செய்யாத ஒன்று அரசியலில் நடந்துள்ளது தான் காரணம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து கடந்த 4-ந்தேதி முடிவுகள் வெளியாகின. இதில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 தொகுதிகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார். இதில் ஒரு இடத்தில் அவர் கண்டிப்பாக பதவியேற்கும் முன்பே ராஜினாமா செய்தாக வேண்டும். எனவே 107 இடங்கள் தவெகவிற்கு உள்ளது.
இப்போது மற்ற கட்சிகளுக்கு வருவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி 73 இடங்களை தேர்தலில் வென்றத. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் திடீரென்று அந்த கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததுடன், ஆட்சிக்கு ஆதரவும் கொடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் மக்கள் மாளிகைக்கு சென்று, ஆளுநர் ஆர்.என்.ரவியை 2 முறை சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 பேரின் ஆதரவு இன்றி ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று கூறி ஆளுநர் மறுத்துவிட்டார்.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே அணியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த அரசியல் சூழ்நிலையில்தான் ஆட்சி அமைக்க ஆதரவு தரவேண்டும் என்று கோரி, தி.மு.க. கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் விஜய் கடிதம் அனுப்பினார். தொடர்ந்து த.வெ.க. முன்னணி நிர்வாகிகள், அந்த கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். இதன் மூலம் இடதுசாரிகள் தவெகவிற்கு ஆதரவு கடிதம் தந்துவிட்டார்கள். இதனால் விஜய் தற்போது 116 இடங்களுடன் இருக்கிறார். 117 என்கிற மேஜிக் இல்லாத காரணத்தால் ஆட்சியமைக்க முடியாத நிலையில் விஜய் இருக்கிறார்.
மறுபக்கம் அதிமுக, திமுக சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றால், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் உள்ளன. ஒட்டுமொத்தமாக 105 இடங்கள் வருகிறது. பாமக 4 இடங்கள், அமமுக ஒரு இடம், தேமுதிக ஒரு இடம், விசிக ஒரு இடம் என 116 வரும்.. கிட்டத்தட்ட டை என்கிற நிலையே இருக்கிறது. இன்னும் ஒரு சீட் பாஜகவிடம் உள்ளது. திமுக, அதிமுக கூட்டணிக்கு பாஜக ஆதரவு தந்தால் ஆட்சியமைக்கும். அதேபோல் பாஜக தவெக கூட்டணிக்கு ஆதரவு தந்தால், பாஜக ஆதரவுடன் விஜய் ஆட்சியமைக்க முடியும் என்கிற உள்ளது. அதாவது தமிழ்நாட்டின் தலையெத்தை தீர்மானிக்கும் இடத்தில் பாஜவின் ஒற்றை சீட் இருக்கும் என்கிற நிலை ஏற்படும்.
ஆனால் ஒரு போதும் இரண்டு பக்கமும் பாஜகவால் நிற்க முடியாத திரிசங்கு நிலை பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தவெக பக்கம் போனால், காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் உள்ளன. அவர்களுடன் கூட்டணி என்றால் சிரித்துவிடுவார்கள். மறுபக்கம் திமுக உடன் கூட்டணி என்று பாஜக அறிவித்தால், தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு இதுவரை ஆதரவு தந்தவர்களே சிரிப்பார்கள்.. யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்வது விஜய்க்கே சாதகமாக முடியும். உண்மையில் பாஜகவின் ஒற்றை எம்எல்ஏ தலையெழுத்தை தீர்மானிக்ககூடியவராகவே இப்போதும் இருக்கிறார்.
ஆனால் அவர் எந்த பக்கம் சாய்ந்தாலும் பாஜகவின் தலையெழுத்து தமிழ்நாட்டில் கேள்விக்குறியாகும் என்பதே எதார்த்தமான உண்மை. அதனால் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டங்கள் இன்றுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். விசிக எடுக்கும் முடிவு தவெகவிற்கு சாதமாகவே இருக்க வாய்ப்பு அதிகம். ஏனெனில் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பாஜக கூட்டணியை ஆதரிக்கும் நிலை வந்தால், அதன் மூலம் அவர் முதல்வரே ஆனாலும், வரலாற்றில் அவர் யாரை எதிர்த்து இவ்வளவு காலம் களம் ஆடினாரோ அந்த கொள்கை மற்றும் அவரது போராட்டம் அத்தனையும் வீணாகும்.
என்னதான் திமுக நட்பு கட்சி என்றாலும் அவர்கள் சொல்வதை திருமாவளவன் கேட்பார் என்று நம்பினாலும், பாஜக ஆதரவுடன் ஆட்சி என்பதை ஏற்க வாய்ப்பே இல்லை.. அதேபோல் முஸ்லீம் லீக் கட்சியும் பாஜகவை ஆதரித்து திமுகவின் பேச்சை கேட்டு ஓட்டுப்போடவும் வாய்ப்பே இல்லை.
எனவே எதுவுமே பாஜகவிற்கும் சரி, திமுகவுக்கும் சரி, அதிமுகவுக்கு சரி ஆட்சியமைக்க முயன்றாலும் நடைமுறையில சாத்தியமே இல்லை என்பதே எதார்த்தம். கண்ணா மூச்சி ஆட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் இன்று முடிவு கட்ட வாய்ப்பு அதிகம். தவெக பக்கம் போகவே அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு முடிவெடுக்க தவறினால் அது பாமகவிற்கு நிச்சயம் ஜாக்பாட் ஆக மாறும் என்பது மறுக்க முடியாத உண்மை.














Click it and Unblock the Notifications